Meal Maker Biriyani: மட்டன் பிரியாணியை மிஞ்சும் மீல்மேக்கர் பிரியாணி
Meal Maker Biriyani: சைவ உணவு பிரியருக்கு மட்டன் சிக்கன் பிரியாணி அளவிற்கு சுவையை தரக்கூடிய ஒரு பிரியாணி இருக்கிறது. அதுதான் மீல்மேக்கர் பிரியாணி.
இன்னும் சொல்லப்போனால் மட்டன் சிக்கன் விரும்பி சாப்பிடுபவர்கள் கூட இந்த பிரியாணியை விரும்பி சாப்பிடுவார்கள். அதை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். இந்த பிரியாணியை நம் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் பொழுது அவர்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

தேவையான பொருட்கள் :
மீல்மேக்கர் - 1 கப்
பாஸ்மதி அரிசி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1/2
டீஸ்பூன் நெய் - 2
டேபிஸ்பூன் எண்ணெய் - 2
டேபிஸ்பூன் பிரிஞ்சி இலை - 2
சீரக தூள் - 1/4
டீஸ்பூன் சோம்பு தூள் - 1/4
டீஸ்பூன் கருப்பு மிளகு தூள் - 1/4
டீஸ்பூன் கிராம்பு தூள் - 1/4
டீஸ்பூன் பட்டை தூள் - 1/4
டீஸ்பூன் புதினா - 1
கைப்பிடி கொத்தமல்லி இலை - 1
கைப்பிடி உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இந்த பிரியாணி செய்வதற்கு பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணீர் ஊற்றி கொதித்ததும் மீல்மேக்கர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
மீல்மேக்கர் நன்கு ஊறிய பிறகு நார்மல் தண்ணீரில் போட்டு அலசி பிழிந்து எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக, அடுப்பில் பிரஷர் குக்கர் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பிரிஞ்சி இலை நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் கலந்து வதக்கி அதன் பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்துக் கொள்ள வேண்டும். தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும் நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலையை போட்டு கலந்து பிறகு அதில் பட்டை தூள், சீரகத்தூள், சோம்பு தூள் மிளகுத்தூள் மற்றும் கிராம்புத்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
மசாலாக்களின் பச்சை வாசனை போன பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பாஸ்மதி அரிசி மீல்மேக்கர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவைக்க விட வேண்டும். பின்னர் பிரஷர் குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைத்துக்கொள்ள வேண்டும்.
குக்கரில் பிரஷர் தானாக அடங்கியதும் மூடியை திறந்து பார்த்தால் சுவையான மீல் மேக்கர் தயார். இந்த மீல் மேக்கர் பிரியாணியுடன் சேர்ந்து வெங்காயம் தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால் மட்டன் பிரியாணி விட சுவை அசத்தலாக இருக்கும்.