முழங்கால் வரை முடி வளர உதவும் மூலிகை சீயக்காய்: எப்படி தயாரிப்பது?
பொதுவாக அனைத்து பெண்களும் இடுப்பிற்கு கீழ் முடி இருக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள்.
ஆனால் மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவு முறை போன்ற பல காரணங்களால் முடி உதிர்தல், வறண்ட முடி பிரச்சனை உண்டாகும்.
அந்தவகையில், நீளமான முடிக்கு வீட்டிலேயே இயற்கையான முறையில் மூலிகை சீயக்காய் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சீயக்காய்- 1kg
- பூலாங்கிழங்கு- 200g
- பச்சைப் பயறு- 50g
- கரிசலாங்கண்ணி- 100g
- வெந்தயம்- 50g
- பூந்திக் கொட்டை- 100g
- செம்பருத்தி- 100g
- ஆரஞ்சு பழத்தோல்- 20g
- கறிவேப்பிலை- 100g
தயாரிக்கும் முறை
முதலில் மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இந்த மூலிகைகள் அனைத்தையும் நன்கு வெயிலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து இதனை ரைஸ் மில்லில் கொடுத்து அல்லது வீட்டில் உள்ள மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
சீயக்காயை அரைத்து முடித்த பின்னதாக காற்று புகாத டப்பாவிற்குள் போட்டு அடைத்து வைக்கவும்.
பயன்படுத்தும் முறை
முதலில் தேவையனை அளவு சீயக்காயை தண்ணீரில் குலைத்து தலையில் அப்ளை செய்யவும்.
சுமார் அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். இதையடுத்து வழக்கம் போல் தலைமுடியை அலசினால் போதும்.
இதை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி பளபளப்பாகவும், வலுவாகவும், நீளமாகவும் மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |