Masala Idiyappam எளிதாக செய்வது எப்படி?
Masala Idiyappam: தற்போதைய காலகட்டங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுவையான உணவுகளை சாப்பிட விரும்புகிறார்கள். அப்படியாக, வீடுகளில் சுவையாக எளிதாக மற்றும் உடனடியாக சமைக்க கூடிய மசாலா இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
உதிர்த்த இடியாப்பம் - 1 கப்
தக்காளி -1
பெரிய வெங்காயம்-1
இஞ்சி- சிறுதுண்டு
பூண்டு- 2
பல் பச்சை மிமிளகாய்-2
தேங்காய்- சிறுதுண்டு
தாளிக்க - பிரிஞ்சி இலை, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு

செய்முறை:
இந்த மசாலா இடியாப்பம் செய்வதற்கு முதலில் தேங்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை லேசாக நீர் தெளித்து மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் தக்காளியை மெலிதாக நறுக்கி கடாயில் நான்கு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை சோம்பு, பட்டை போட்டு வெடித்தவுடன் கருவேப்பிலையை போட வேண்டும்.
பிறகு அரைத்த விழுதுவை போட்டு வாசம் போகும் வரை இளந்தீயில் கிளற வேண்டும். நன்கு வெந்தவுடன் வெங்காயம் தக்காளி சேர்த்து அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து கிளறி கொள்ள வேண்டும். விழுது போல் எல்லாம் சேர்ந்து வெந்தபின் இடியாப்பத்தை கொட்டி நெய் சேர்த்து கிளற வேண்டும்.
கடைசியாக எலுமிச்சை பழத்தை பிழிந்து கிளறி நாம் எல்லோருக்கும் சாப்பிட பகிரலாம். இதனுடன் வெங்காய தயிர் பச்சடி சாப்பிட்டால் பிரியாணி போல் இருக்கும். விரும்பினால் கேரட் ,பட்டாணி, காலிஃப்ளவரை சிறிது துண்டுகளாக உப்பு சேர்த்து குலையாமல் வேக வைத்து கலந்து கொள்ளலாம்.