சமையலறையில் உள்ள கோதுமை மாவில் வண்டு வருவதை தடுப்பது எப்படி?
மாவு என்றென்றும் நீடிக்கும் பொருளாக மக்கள் கருதுகின்றனர்.
அது தொழில்நுட்ப ரீதியாக சூரிய ஒளி, ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதத்திற்கு வெளிப்படும் போது மோசமாகும். பூச்சிகள் வரும். எனவே பூச்சிகளிடம் இருந்து மாவை எப்படி பாதுக்காக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மாவு சேமிப்பது எப்படி?
உங்கள் உலர் பொருட்களை காற்று புகாத உணவு சேமிப்பு கொள்கலன்களில் சேமித்து வைப்பது நல்லது.
காற்று புகாத பிளாஸ்டிக் பொருட்கள் அல்லது கண்ணாடி மேசன் ஜாடியில் மாவை சேமித்து வைப்பது 10 மாதங்கள் வரை புத்துணர்ச்சியுடன் இருக்கும் மற்றும் பூச்சிகள் வருவதை தடுக்கும்.
இனி கோதுமையுடன் கிராம்பு, வேப்ப இலை, கல் உப்பு, போன்றவற்றை கலந்து வைத்தால் பூச்சி வருவது தடைப்படும்.
நேரம் கிடைக்கும் போது எல்லாம் கொல்கலனில் இருந்து மாவை வெளியில் எடுத்து வெயிலில் காய வைக்கவும்.
பழைய மாவுடன் புதிய மாவு சேர்ப்பதை குறைத்துக்கொள்ளவும். பழைய மாவில் வண்டு பிடிப்பது போல் இருந்தால் அதை புதிய மாவுடன் கலந்தால் அதுவும் மோசமாகி விடும்.
நீங்கள் கொட்டி வைக்கும் கொல்கன்கள் இறுக்கமான மூடியாக காற்று புகாதவாறு பார்த்துக்கொள்வது சிறந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |