உங்கள் தலை முதல் கால் வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்? அறிந்து கொள்வோம் வாங்க
Symptoms
Health tips
Diseases
By Logeswari
பொதுவாக மனித உடலுக்குள் உண்டாகும் பல்வேறு நோய்க்களுக்கும் நம் உடலே சில அறிகுறிகளை வெளிப்படுத்தும். அப்படி நம் உடல் வெளிக்காட்டும் அறிகுறிகளை நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டாலே எந்த நோயையும் அதன் ஆரம்ப கட்டத்திலேயே மிக எளிதாக கண்டறிந்து தீர்வைப் பெற முடியும்.
சிலருக்கு எந்த அறிகுறி இருந்தால் என்ன நோய் என்பது சரி வர தெரியாததால் அதனை அலட்சியமாக எடுத்து கொள்வார்கள். இதனால் உயிரே பறிபோகும் அளவிற்கு ஆபத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கு உதவும் வண்ணம் சில முக்கியமான அறிகுறிகளை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்..
- சிலருக்கு நாக்கில் வெள்ளைப்படிமமாக இருப்பதால் சாப்பிடும் உணவு இனிப்பாக இருந்தாலும் கசப்பாக இருக்கும். அவர்களுக்கு செரிமானத்தில் எதோ பிரச்னை இருக்க கூடும். அதுபோல நாக்கு சிவப்பாக இருந்தால் அல்சரும், மஞ்சள் நிறத்தில் இருந்தால் பித்தத்தின் அறிகுறியாக இருக்கும்.
- முகம் கலை இழந்து சோர்வாக இருந்தால் உடலில் நீர்சத்து குறைந்துள்ளதாக அர்த்தம். வாயில் இருந்து துர்நாற்றம் வீசினால் வயிற்றில் புண்கள் இருப்பதற்கான அறிகுறி ஆகும்.
- ஆண்கள், பெண்கள் என இருவருக்குமே சிறு வயதில் இருந்தே இளநரை பாதிப்பு இருக்கும். அவ்வாறு இருந்தால் உடலில் பித்தம் குறைவாக இருப்பதாக அர்த்தம். இந்த காலத்து பெண்களுக்கு வரும் பருக்கள், சரும பிரச்சனைகளுக்கு காரணம் வயிறு சுத்தமாக இருப்பது ஆகும்.
- சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளுள் ஒன்று மலசிக்கல். காலையில் தூங்கி எழுந்ததும் மலம் கழிக்கவில்லை என்றால் மலசிக்கலுக்கான அடையாளம்.
இது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் பக்கத்தில் உள்ள மருத்துவரை அணுகி பிரச்னைக்கு உடனடி தீர்வு காணுங்கள்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US