தலை முடி உதிர்வதை தடுக்கனுமா? அப்போ இந்த உணவுகளை சாப்பிடவே சாப்பிடாதீங்க
நாம் உண்ணும் உணவுகளே நமது உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை தீர்மானிக்கும்.
இந்த ஆரோக்கியம் சரும பொலிவிலும், கூந்தலின் ஆரோக்கியமான வளர்ச்சியிலும் வெளிப்பட செய்யும்.
அந்த வகையில் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி கூந்தல் உதிர்வுக்கு தீர்வு காண வேண்டுமெனில் கீழ்காணும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
சர்க்கரை
அதிக சர்க்கரை சாப்பிடுவதால், நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கு வழிவகுக்கும் இன்சுலின் எதிர்ப்பு காரணமாக நீங்கள் முடியை இழக்க நேரிடலாம்.
சர்க்கரை கரும்பிலிருந்து தயாரிக்கப்பட்டாலும் பல இரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் இவை உடலில் தீராத நோயான இதய பாதிப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை உண்டாகும். மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் வழுக்கை ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆல்கஹால்
நமது தலைமுடி கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது. கெரட்டின் உங்கள் தலைமுடிக்கு ஒரு நல்ல அமைப்பைக் கொடுக்கும். ஆனால் ஆல்கஹால் இந்த புரதத் தொகுப்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் முடி பலவீனமடைய காரணமாகவும் உள்ளது. மேலும், அதிக ஆல்கஹால் உட்கொள்வது ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி தலைமுடியின் வேர்பகுதியை செயலிழக்க செய்யலாம்.
சோடா
டயட் சோடாக்களில் அஸ்பார்டேம் எனப்படும் ஒரு செயற்கை இனிப்பு உள்ளது. இது தலைமுடி வேர்களை சேதப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீங்கள் சமீபத்தில் முடி உதிர்தலை சந்திக்கிறீர்கள் என்றால், இந்த டயட் சோடாக்களை முழுமையாக தவிர்ப்பது நல்லது.
ஜங்க் புட்
ஜங்க் புட்ஸ் பெரும்பாலும் நிறைவுற்ற மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகளால் நிறைந்திருக்கும். அவை உங்கள் உடலை பருமனாக்குவதோடு, இருதய நோய்களுக்கும் வழிவகுக்கிறது. அதேபோல தலைமுடி உத்தரவுக்கும் காரணமாக அமைகின்றது. மேலும், எண்ணெய் நிறைந்த உணவுகள் உங்கள் உச்சந்தலையை க்ரீஸாக மாற்றும் மற்றும் துளைகளை அடைத்து, முடி வேர்களின்