வீட்டில் விளக்கேற்றும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்: இனி இப்படி ஏற்றுங்கள்
வீட்டில் எந்த விஷேசம் நடந்தாலும் விளக்கேற்றி செய்வதுதான் தமிழக மக்களின் வழக்கம்.
அதிக எண்ணிக்கையில் விளக்கு ஏற்றி வழிபடுவது என்பது சிறப்பைத் தரும்.
ஏற்றப்படும் விளக்கின் முகங்கள் எத்தனை என்பதைப் பொறுத்தே பலன்கள் மாறுபடும்.
விளக்கு ஏற்றுவதற்கான சில சம்பிரதாயங்கள்
வீட்டில் விளக்கு ஏற்றுவதாக இருந்தால் பெண்கள் ஏற்றுவது சிறப்பு.
விளக்கு ஏற்றுவதற்கு முன்பு மஞ்சள், குங்குமம், சந்தனம், உடன் பூ சாற்றி விளக்கை அலங்காரம் செய்திருப்பது அவசியம்.
தீபம் ஏற்றும் போது கணபதி, குரு, லட்சுமி, சரஸ்வதி, நவக்கிரகங்கள், குலதெய்வம், இஷ்டதெய்வங்களை நினைத்து பிரார்த்தித்தால் கூடுதல் பலனை தரும்.
விளக்கின் தீயை வாயால் ஊதி அணைக்கக்கூடாது, மாறாக மலர்களை கொண்டு அணைக்கலாம். அதே போல, விளக்கை பந்தம் போல புகை வரும் படியாக எரிக்கக் கூடாது.
கடலை எண்ணெய்யில் விளக்கு ஏற்றுவது மகா பாவம். இதனால் வீடு தொடைத்துப் போகும், வம்ச விருத்தி இருக்காது என்று சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.
இவை தவிர, தெற்கு திசை தவிர்த்து மற்ற எந்த திசையிலும் தீப முகம் இருக்கலாம்.
காமாட்சி அம்மன் விளக்கு என்றால், ஒரு பித்தளை தட்டு அல்லது தாமிரம் அல்லது பஞ்சலோகத் தட்டில் அரிசி, துவரை, உளுந்து, மஞ்சள் கிழங்கு வைத்து, அதன் மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.
குத்து விளக்கு என்றால், ஒரு சிறிய வாழை இலையில் அரிசி வைத்து, அதன்மேல் விளக்கை வைத்து தீபமேற்ற வேண்டும்.
விளக்கில் இடும் திரிகளின் பலன்
சுத்தமான பன்னீரில் பஞ்சை நனைத்து, திரியாக்கி, நிழலில் காயவைத்து, விளக்கேற்றப் பயன்படுத்தினால் மங்கலம் வளரும்.
திருமணத் தடை உள்ளவர்கள், வீட்டில் எந்நேரமும் சண்டை சச்சரவுகளுடன் வாழ்க்கை நடத்துபவர்கள், அதிக கடன் கொண்டவர்கள் சிவப்பு நூல் திரியினால் விளக்கேற்றலாம்.
வீட்டில் துஷ்ட ஆவிகள் இருப்பதாக நினைத்தால், வெள்ளை எருக்கன் திரி ஏற்றினால், துஷ்ட சக்திகள் நீங்கி, மங்கலம் உண்டாகும்.
மஞ்சள் நூல் திரியில் விளக்கேற்ற, அம்மன் அருள் கிடைக்கும்.
குலதெய்வ சாபம் உள்ளவர்கள், குல தெய்வத்துக்கு வாழைத்தண்டு திரியில் தொடர்ந்து தீபம் ஏற்றினால், சாபத்திலிருந்து விடுபடலாம்.
தாமரைத் தண்டு திரி, மகாலக்ஷ்மியின் அருள் கிடைக்கச் செய்து, வாழ்க்கையில் மங்கலத்தை உண்டாக்கும். இது அதிர்ஷ்டத்தை தரும். இதனால் தரித்திரம் நீங்கி ராஜ யோகம் கிட்டும்.
வெள்ளை வஸ்திரத் துண்டுகளை பன்னீரில் நனைத்து, திரியாகத் திரித்து, உலர்த்தி விளக்கேற்றி வர, தெய்வக் குற்றங்கள் நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |