வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள மருத்துவர் கூறும் எச்சரிக்கை

Summer Season
By Yashini Apr 24, 2024 06:07 PM GMT
Report

கோடை காலத்தில் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்தும், அது தொடர்பான விழிப்புணர்வு பதிவை முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மருத்துவர் பரூக் அப்துல்லா.

அவர் பதிவிட்டுள்ளதாவது,

நமது மாநிலத்தில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் அதீத வெப்பத்திற்கு உள்ளாவதால் வெப்ப அயர்ச்சி மற்றும் வெப்ப வாதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

வெப்பத்தின் காரணமாக அதீத வியர்வை வெளியேறுதல், தலை சுற்றுதல், குமட்டல், வாந்தி வருவது போல இருப்பது ஆகிய அறிகுறிகள் வெப்ப அயர்ச்சியைக் குறிக்கின்றன.

உங்களது உடலின் மையப்பகுதி வெப்பம் தாங்கும் அளவை விட அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கு உங்களின் உடல் கொடுக்கும் சமிக்ஞை இது. 

வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள மருத்துவர் கூறும் எச்சரிக்கை | How To Protect Yourself From The Heat In Tamil

வெப்பத்தில் இருந்து பாதுகாக்க செய்யவேண்டியவை

வெயில் இல்லாத நிழலான பகுதிக்கு சென்று விட வேண்டும்.

பைக் ஓட்டிக் கொண்டிருந்தால் பைக்கை ஓரம் கட்டி விட வேண்டும்.

குளிர் நீர், பழச்சாறுகள், இளநீர், மோர்,தர்பூசணி ஆகியவற்றை வாங்கி அருந்த வேண்டும்.

குளிர் நீரில் குளியல் போடலாம் அல்லது குளிர் நீரை உடல் முழுவதும் குறிப்பாக முகம், கழுத்து பகுதிகளில் ஊற்றிக் கொள்ள வேண்டும். 

ஆடைகளையும் நீரால் நனைத்துவிடுவது நல்லது.

வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள மருத்துவர் கூறும் எச்சரிக்கை | How To Protect Yourself From The Heat In Tamil

பாதங்கள் மற்றும் கைகளை குளிர்ந்த நீரில் அமிழ்த்தி இருப்பதன் மூலம் உடலின் மையப்பகுதி வெப்பத்தை தணிக்க முடியும்.

இந்த வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகளை அலட்சியம் செய்தால் வெப்ப வாதத்தில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

இதனால் சிந்திக்க இயலாத பிதற்றல் நிலை, மூர்ச்சையாகிவிடுதல் போன்றவை ஏற்படும். இந்நிலையில் கவனிக்காமல் விட்டால் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

இத்தகைய நிலையில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி இதுதான். 

முதலில் செய்யவேண்டிய முதலுதவி

மூச்சு விடுவதையும் இதயம் துடிப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இதயத்துடிப்போ மூச்சோ இல்லாத நிலையில் சிபிஆர் எனும் இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் வழங்கும் முதலுதவியை வழங்க வேண்டும். 

மூச்சு விடுகிறார் இதயத்துடிப்பு நன்றாக இருக்கிறது என்றால் உடனே அவரை நிழலான பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும்.

அவரது ஆடைகளைக் களைந்து விட்டு ஐஸ்கட்டி நிரப்பப்பட்ட நீரில் அவரது கழுத்துப் பகுதி வரை அமிழ்த்தி விட வேண்டும். 

ஐஸ்கட்டி நீரில் அமிழ்த்திய ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு டிகிரி செல்சியஸ் மைய வெப்பம் குறையும்.   இவ்வாறு பதினைந்து நிமிடங்கள் அமிழ்த்தி வைக்கும் போது நல்ல பலன் கிடைக்கும்.

வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள மருத்துவர் கூறும் எச்சரிக்கை | How To Protect Yourself From The Heat In Tamil

ஐஸ்கட்டி இல்லாத நிலையில் குளிர்ந்த நீரைக்கொண்டு துணியில் நனைத்து உடல் முழுவதும் ஒத்தி எடுக்கலாம்.  

கை விசிறி கொண்டோ அல்லது மின் விசிறியைக் கொண்டோ அவர் மீது காற்று வீசுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பானங்களைப் பருகும் நிலைக்கு அவர் வந்ததும் பருகுவதற்கு குளிர்ந்த நீர், பழச்சாறு, தாது உப்புகள் நிரம்பிய ஓஆர்எஸ் திரவம் போன்றவற்றைக் குடிக்கக் கொடுக்க வேண்டும். 

அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்த நாளம் வழி திரவங்கள் ஏற்றும் சிகிச்சை வழங்குவதும் பலனளிக்கும்.

தாமதம் செய்யும் சில நிமிடங்களும் உயிரிழப்பிற்குக் காரணமாகிவிடும் அதுவே விரைந்து சிகிச்சை அளிக்கும் போது உயிரிழப்பு தவிர்க்கப்படும்.   

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US