கனேடிய குடியுரிமை: கணவர் அல்லது மனைவியுடனான உறவை நிரூபிப்பது எப்படி?
கனேடிய குடிமக்கள் அல்லது கனேடிய நிரந்தர குடியிருப்பு நிலை பெற்றோர், தங்கள் கணவர் அல்லது மனைவியை தங்களுடன் வாழ கனடாவுக்கு அழைத்துக்கொள்ளலாம்.
அவர்கள், தாங்கள் ஸ்பான்சர் செய்பவர் தங்கள் கணவர் அல்லது மனைவிதான் என்பதை நிரூபிக்கவேண்டும்.
கனேடிய குடிமக்கள் அல்லது கனேடிய நிரந்தர குடியிருப்பு நிலை பெற்றோர், தங்கள் கணவர் அல்லது மனைவியை தங்களுடன் வாழ கனடாவுக்கு அழைத்துக்கொள்ளலாம்.
அவர்கள் நிரந்தர குடியிருப்பு நிலை பெற நீங்கள் ஸ்பான்சஎர் செய்யவும் முடியும்.
ஆனால், உங்களுக்கும் உங்கள் கணவர் அல்லது மனைவிக்குமிடையிலான உறவு உண்மையானதுதான் என்பதை நீங்கள் நிரூபிக்கவேண்டியிருக்கும்.
எப்படி நிரூபிப்பது?
உங்கள் கணவர் அல்லது மனைவியுடனான உங்கள் உறவு உண்மையானதுதானா என்பதைக் கண்டறிவதற்காக நீங்கள் கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு கோரும் சில ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும். அவையாவன:
- பூர்த்தி செய்யப்பட்ட ’Relationship Information and Sponsorship Evaluation’ என்னும் தலைப்பிடப்பட்ட IMM 5532 ஆவணம்.
- திருமணச் சான்றிதழ மற்றும் உங்கள் திருமணத்தை பதிவு செய்ததற்கான ஆதாரம்.
- உங்கள் கணவர் அல்லது மனைவி ஏற்கனவே விவாகரத்து பெற்றவராக இருந்தால், அதற்கான ஆதாரம்.
- உங்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் இருந்தால், பிறப்புச் சான்றிதகள், அல்லது தத்தெடுத்திருந்தால் அதற்கான ஆதாரம்.
- திருமண அழைப்பிதழ் மற்றும் புகைப்படங்கள்.
இதுபோக, கீழ்க்கண்ட ஆவணங்களில் இரண்டையாவது தம்பதியர் சமர்ப்பிக்கவேண்டும்:
- இருவரும் சேர்ந்து வாங்கிய வீடு இருந்தால் அதற்கான ஆதாரம்.
- இருவரும் சேர்ந்து வாழும் வீட்டின் வாடகை ஒப்பந்தம்.
- இருவரும் சேர்ந்து பயன்படுத்தும் மின்சாரம், சமையல் எரிவாயு, தொலைபேசி இணைப்புக்கான ஆதாரம், இணைந்து வாங்கிய கிரெடிட் கார்டு அல்லது வங்கிக்கணக்குகளுக்கான ஆதாரம்.
- இருவரும் சேர்ந்து வாங்கிய வாகனக் காப்பீடு.
- இருவரும் ஒரே வீட்டில் வாழ்வதை நிரூபிப்பதற்காக ஓட்டுநர் உரிமம், தொலைபேசிக்கட்டணம், வரி செலுத்திய ரசீது முதலான ஆவணங்கள்.
- இருவரும் தொடர்பு கொண்டதற்கான ஆதாரமாக, கடிதங்கள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், சமூக ஊடக உரையாடல்கள் முதலான ஆதாரங்கள்.
கனடாவில் வாழும் கணவன் அல்லது மனைவி, வெளிநாட்டில் வாழும் கணவன் அல்லது மனைவியை சென்று சந்தித்ததற்கு ஆதாரமாக விமான டிக்கெட்கள், போட்டிங் பாஸ்கள், முத்திரையுடன் பாஸ்போர்ட் நகல்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் கணவர் அல்லது மனைவியை சென்று சந்திக்கவில்லையானால், அதற்கான விளக்கமும் தேவை. அதற்கான வசதி, IMM 5532 questionnaire (Part C, question 4)இலேயே உள்ளது.