WhatsAppல் Delete செய்யப்பட்ட மெசேஜ்களை மீண்டும் எளிதாக படிப்பது எப்படி?
வாட்ஸ் அப்பில் நாம் தொடர்ந்து கற்று கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் பல விடயங்களும் உள்ளது.
வாட்ஸ் அப்பில் டெலீட் செய்யப்பட்ட எந்தவொரு செய்திகளையும் படிக்க விரும்பும் பயனர்களுக்கு ஒரு சலுகை கிடைத்துள்ளது.
அதாவது கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி, ஒருவரால் டெலீட் செய்யப்பட்ட வாட்ஸ் அப் செய்திகளை தெரிந்துகொள்ள முடியும். டெலீட்டட் மெசேஜ் வாட்ஸ் அப் செயலி அதன் பயனர்களுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்தி தருவதோடு, அன்பான உறவுகளுடன் இணைந்திருக்க பல சலுகைகளையும் அளிக்கிறது.
அந்த வகையில் ஒரு செய்தியை வாட்ஸ் அப் மூலம் நாம் அனுப்பும் போது, அந்த செய்தியை பெறுபவர் பார்ப்பதற்கு முன்னமே நம்மால் டெலீட் செய்துகொள்ள முடியும்.
அதாவது Delete for Everyone என்ற அம்சங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு முன்னாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவைகள் தற்போதுள்ள வாட்ஸ் அப் அப்டேட் மூலம் பயன்பாட்டில் உள்ளது.
அவ்வாறு டெலீட் செய்யப்பட்ட செய்திகளை நீங்கள் அறிந்து கொள்ள உங்களுக்கு எளிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் வாட்ஸ் அப் செயலியில் இல்லை என்றாலும், ஒரு வகையான ஹேக் மூலம் அவற்றை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். இந்த சேவைகள் கண்டிப்பாக Android பயனர்களுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் வாட்ஸ் அப்பில் நீக்கப்பட்ட செய்திகளை படிக்க
முதலில் கூகுள் பிளே ஸ்டோருக்குச் சென்று நோட்டிசேவ் (Notisave) என்ற செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
பிறகு, தேவையான அனைத்து அனுமதிகளை அதாவது அறிவிப்புகள், புகைப்படங்கள், மீடியா மற்றும் கோப்புகளைப் படிக்க accept செய்து தானாகத் தொடங்கும் விருப்பத்தை மாற்றவும்.
வாட்ஸ் அப் செய்திகள் உட்பட நீங்கள் பெற்ற ஒவ்வொரு notification பதிவும் உங்களுக்கு கிடைக்கும்.
இதன் மூலம் செய்திகளை அனுப்பியவர் அவற்றை நீக்கினாலும், உங்களால் அவற்றை படிக்க முடியும். மேலும் நீங்கள் அறியாமல் அல்லது தற்செயலாக ஸ்வைப் செய்த notification களையும் நீங்கள் படிக்கலாம்.
இந்த நோடிசேவ் செயலியை பயன்படுத்துவதற்கு சில நிபந்தனைகள் உண்டு. அதாவது இந்த செயலியின் இலவச பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் நீங்கள் விளம்பரங்களை சகித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மாதத்திற்கு ரூ .65 முதல் கட்டண பதிப்பு துவங்குகிறது.