உங்கள் Smartphone-ல் Delete ஆன Photos, Videos-ஐ மீட்டெடுப்பது எப்படி?
உங்களுடைய மொபைலில் Google Photos-ல் வைத்திருந்த Photos, Videos-களை தவறுதலாக Delete செய்துவிட்டால் கவலை படவேண்டாம்.
சமீபத்தில் Delete Photos, Videos-களை எடுப்பதற்கு Google Photos ஒரு Trash bin-ஐ வழங்குகிறது.
அந்தவகையில், Delete ஆன Photos, Videos-ஐ எப்படி மீட்டெடுப்பது என்பதை பார்க்கலாம்.
எப்படி மீட்டெடுப்பது?
முதலில் உங்களுடைய Smartphone-ல் உள்ள Google Photos application-ஐ திறந்து கொள்ளவும்.
கீழ் வலது மூலையில் காணப்படும் Library Tab-ஐ Click செய்யுங்கள்.
அதில் Trash option இருக்கிறதா என்று தேடி பாருங்கள். உங்களுடைய சாதனத்தின் அடிப்படையில் அது ஒரு Sub-menu-ன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும்.
Trash என்பதை டேப் செய்ததும் நீங்கள் சமீபத்தில் Delete செய்த அனைத்து Photos மற்றும் Videos-களை காணலாம்.
பட்டியலை Scroll செய்தோ அல்லது தேடல் அம்சம் மூலமாகவோ நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் வீடியோவை கண்டுபிடிக்கலாம்.
குறிப்பிட்ட அந்த Video-வை டேப் செய்து அழுத்திப் பிடித்து Select செய்யுங்கள். ஒரே நேரத்தில் பல Videos-களையும் இவ்வாறு Select செய்து மீட்டெடுக்க முடியும்.
Video-களை Select செய்தபிறகு Restore பட்டனை Click செய்யுங்கள். இந்த பட்டன் பொதுவாக screen-ன் கீழ் அல்லது மேல் வலது மூலையில் காணப்படும்.
இப்பொழுது Trash-லிருந்து Videos மீட்டெடுக்கப்பட்டு, மீண்டும் உங்களுடைய Google Photos Library-ல் சேமிக்கப்பட்டிருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |