7 நாட்களில் தொப்பையை குறைக்க வேண்டுமா? அப்போ தினமும் இதை மறக்காம செய்யுங்க
சிலருக்கு குழந்தை பிறந்த பிறகு தொப்பை ஏற்படும். சிலருக்கு சாப்பிட்டுவிட்டு உடனே தூங்குவதால் தொப்பை வரும். வெறும் 7 நாட்களில் உங்களின் தொப்பையை கரைக்க உதவும் குடிநீரை எப்படி செய்வது குறித்து விரிவாக பார்க்கலாம் வாங்க..
தேவையான பொருட்கள்:-
வெந்நீர்
பட்டை
இஞ்சி
எலுமிச்சை பழம்
செய்முறை:
முதலில் ஒரு டம்ளரில் வெந்நீரை எடுத்து கொள்ளவும். அதில் பட்டையை பொடி செய்து அதில் அரை ஸ்பூன் சேர்த்து கொள்ளவும்.
அடுத்ததாக இஞ்சியை தட்டி தண்ணீரில் சேர்க்கவும். பின்னர், எலுமிச்சை பழத்தை தோலுடன் சேர்த்து கொள்ளவும். பின் இதை 10 நிமிடம் மூடி வைக்கவும்.
10 நிமிடம் கழித்து வடிகட்டி அருந்தலாம் அல்லது அதில் தேன் சேர்த்தும் பருகலாம். இதே போன்று 7 நாட்கள் செய்து வந்தால் உங்களின் கொழு கொழு தொப்பை காணாமல் போய்விடும்.
நன்மைகள்:-
காலையில் வெறும் வயிற்றில் காபிக்கு பதிலாக இதை குடித்து வந்தால் நல்ல பயனை கொடுக்கும். இதனை குடிப்பதால் தொப்பை மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
நம் உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க இது உதவி செய்யும் அதுபோல மலசிக்கல், அல்சர் போன்றவையில் இருந்து விடுபடலாம்.