முகத்தை குண்டாக காட்டும் முகக் கொழுப்பு - வீட்டில் இருந்தப்படியே குறைப்பது எப்படி?
ஒவ்வொரு பெண்ணும் தன் முகம் மெலிதாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
ஏனென்றால் உடல் மெலிதாக இருந்தாலும், முகம் பெரியதாக இருந்தால், நீங்கள் பருமனாகவும், உங்கள் வயதை விட வயதானவராகவும் இருப்பீர்கள்.
பெண்கள் கொழுப்பைக் குறைக்க பல்வேறு வகையான பயிற்சிகளையும் செய்து வருகின்றனர். ஆனால் அவை பெரும்பாலும் குறித்த தோற்றத்தை பெற உதவுவதில்லை.
ஆனால் முகத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க சரியான உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது, முக்கியமான ஒரு விடயமாகும்.
சில உணவுகளை சாப்பிடுவதால் முகத்தில் கொழுப்பு அதிகரிக்கும். முகத்தில் கொழுப்பை அதிகரிக்கும் சில உணவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
சோடியம் நிறைந்த உணவுகள்
உப்பு சேர்க்கப்பட்ட சிற்றுண்டிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட சூப்களில் அதிக அளவு சோடியம் உள்ளது. இவை அனைத்தும் உடலில் தண்ணீரைத் தேக்கி, முகத்தில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் பொதுவாக அதிக அளவு ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சர்க்கரை மற்றும் சோடியம் இருக்கும். இவற்றில் உடலில் வீக்கத்தை உண்டாக்கும் மற்றும் முகத்தில் கொழுப்பை அதிகரிக்கும்.
மது
மதுஅதிக அளவு கலோரிகளைக் கொண்டுள்ளது. இதைக் குடிப்பதன் மூலம், உடல் நீரிழப்புக்கு ஆளாகி, உடலில் நீர் தேங்கி, முகத்தில் வீக்கம் ஏற்படுகிறது. அதிகமாக மது அருந்துவதும் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது.
சர்க்கரை பானங்கள்
சர்க்கரை பானங்களில் கலோரிகள் அதிகமாக இருப்பதால், அவை உடலில் கொழுப்பு சேர வழிவகுக்கும். இந்த பானங்கள் எடை அதிகரிப்பையும், முகத்தில் கொழுப்பையும் ஏற்படுத்தும்.
கார்போஹைட்ரேட்டுகள்
வெள்ளை பாண், பேக்கரி பொருட்கள் மற்றும் சர்க்கரை நிறைந்த சிற்றுண்டிகள் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் ஆகும். இந்த உணவுகள் இரத்த சர்க்கரை அளவையும் உடல் கொழுப்பையும் விரைவாக அதிகரிக்கும். இதன் காரணமாக, முகத்தில் கொழுப்பு சேரத் தொடங்குகிறது.
எனவே இவற்றைத் தவிர்ப்பது மற்றும் எப்போதும் ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவது முக்கியம்.
புதிய பழங்கள், காய்கறிகள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற உணவுகள் முக கொழுப்பைக் குறைக்கும். உங்கள் முகம் பளபளப்பாகவும் மெலிதாகவும் இருக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு சீரான உணவைப் பின்பற்ற வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |