ஒரே வாரத்தில் முடி உதிர்தலை கட்டுப்படுத்த வேண்டுமா? அருமையான வீட்டு வைத்தியம் இதோ!
நாம் எவ்வளவு தான் தலைமுடியை பராமரித்தாலும் சிலருக்கு முடி கொட்டுதல் பிரச்சனை நிற்காமல் இருக்கும். இதற்கு நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் இல்லாமல் இருந்தாலும் முடி உதிர்வு பிரச்சனை இருக்கும்.
நமது உடலில் ஏற்படும் சத்துக்கள் குறைபாட்டால் தான் முடி உதிர்தல், சரும பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. எனவே தான் சத்தான உணவுகளையும் நாம் எடுத்துக் கொள்வது முக்கியமாகும்.
ஏனெனில் தலைமுடியை எவ்வளவு தான் இயற்கை முறையில் பராமரித்தாலும் சத்தான உணவுகளும் அவசியம். தினமும் ஒரு கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் இரும்பு சத்து அதிகரிக்கும். முடிகளுக்கு சரியான ஊட்டத்தை எப்படி அதிகரிப்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..