ஒரு பல் பூண்டு இருந்தால் போதும்... ஒரே இரவில் Bathroom பளபளக்குமாம்!
ஒருவர் வாழ்வதற்கு முக்கியமாக தேவைப்படுவது உடை, உணவு மற்றும் உறையுள். அதிலும் நாம் வாழும் வீடு ஒரு முக்கியமான இடமாகும்.
வசிக்கும் வீடு வாடகை வீடோ, சொந்த வீடோ ஆனால் வீட்டை பராமரிக்கும் வேலை என்பது ஒன்று தான். அதிலும் குழந்தைகள் இருக்கும் வீட்டை அடிக்கடி சத்தம் செயடது பராமரித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
வீட்டை எவ்வளவு தான் சுத்தம் செய்தாலும் கழிவறையை சுத்தமாக வைத்துக்கொள்வது கடினம். அது தினமும் பாவிக்கும் ஒரு இடமாகும். மேலம் தண்ணீர் அதிகமாக உபயோகிக்கப்படும் ஒரு இடம்.
இந்த இடத்தில் தான் அதிகளவில் கிருமிகளும் காணப்படும். அசுத்தமாகவும் இருக்கும். ஆகேவே வீட்டில் இருக்கும் பொருள் ஒன்றை வைத்து எப்படி ஒரே இரவில் சுத்தம் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
ஒரு பல் பூண்டு
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் தான் பூண்டிற்கு தனித்துவமான நறுமணத்தை வழங்குகிறது. இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை வராமல் தடுக்கும்.
ஆகவே இதை வைத்து எப்படி கழிவறையை சுத்தம் செய்யலாம் பார்க்கலாம்.
- ஒரு பல் பூண்டை நன்கு தட்டி கழிவறையில் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் ஒரு முறை தேய்த்து கழுவினால், கழிவறையில் உள்ள துர்நாற்றம் நீங்குவதோடு கிருமிகளும் அழிந்துவிடும்.
- ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
-
நீரானது நன்கு கொதித்த பின்பு இரண்டு பல் பூண்டுகளை பொடியாக நறுக்கி நன்கு கொதித்த பின்பு அடுப்பை அணைக்க வேண்டும்.
- பின்பு 15 நிமிடங்கள் கழித்து அந்நீரை கழிவறையில் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து மறு நாள் காலையில் தேய்த்து கழுவவும்.
இந்த முறையை தொடர்ந்து செய்து வருவதால் கழிவறையில் உள்ள கிருமிகள் அழியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |