ஜிம்மிற்கே போகாமல் வீட்டிலே உடல் எடையை ஈஸியாக குறைப்பது எப்படி?
உடல் எடை குறைப்பது மிகவும் கடினமான விஷயம். ஆனால் சரியான உணவுமுறைகள், உடற்பயிற்சிகளை கையாண்டால் நிச்சயமாக எடையை குறைத்துவிடலாம்.
சிலர் உடல் எடையை குறைப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்திவிட்டு ஆரோக்கிய விஷயத்தில் தவறு செய்து விடுவார்கள். இதனால் உடலில் உள்ள சத்துக்கள் வீணாகிவிட வாய்ப்புள்ளது.
ஆகவே சரியான முறையை கொண்டு உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தையும் வளர்த்து கொள்ள வேண்டுமா? வீட்டின் சமையலறையில் இருக்கும் இந்த ஐந்து பொருள்கள் எடையை குறைக்க போதுமானது. சரி வாங்க இதை எப்படி எந்த நேரத்தில் பயன்படுத்துவது குறித்து பார்க்கலாம்.
தேவையான வழிமுறைகள்:-
பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அவ்வாறு கொதிக்கும் வேளையில் அதில் சிறிதளவு நெய் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக குடித்தால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்குகிறது.
சூடான தண்ணீரில் சீரகம், பெருஞ்சீரகம், கொத்தமல்லி விதைகள், ஏலக்காய் போன்றவை சேர்த்து குடித்தால் செரிமான பிரச்னையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் மற்றும் உடல் எடையையும் கணிசமாக குறைக்கும்.
காலையில் வெறும் வயிற்றில் தேநீர் அருந்திய பிறகு இயற்கையான கசப்பான பழங்களை எடுத்துகொள்ளுங்கள். பச்சை ஆப்பிள், ப்ளூபெர்ரி, செர்ரி, நெல்லி பழுத்த வாழைப்பழங்கள் போன்றவை எடுத்துக்கொள்ளலாம்.
சாதத்தை எடுத்துக்கொள்ளாமல் பழங்கள் மற்றும் வேகவைத்த அல்லது பச்சை காய்கறிகளை சாப்பிடும் பொழுது விரைவாக உடல் எடையை குறைக்கலாம். சீக்கிரமே நீங்கள் இழந்த எடையை உணர்வீர்கள்.