இரண்டே நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்க வேண்டுமா? இதோ சில சூப்பரான வழிகள்!
பொதுவாக முகப்பருக்கள் முகத்தை விட்டு சீக்கிரமாக சென்று விட்டாலும் கூட, முகத்தில் உள்ள இந்த கரும்புள்ளிகள் முகத்தை விட்டு செல்ல மிக நீண்ட நாட்கள் ஆகும்.
இதற்காக பலர் கண்ட கண்ட பொருட்களை வாங்கிப்பயன்படுத்துவார்கள். ஆனால் இது எளிதில் போகாது.
இதனை சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. நாளாடவில் அது மறாத தழுப்பாக மாறிவிடும்.
அந்தவகையில் எளியமுறையில் கரும்புள்ளியை குறைக்க வேண்டுமாயின் ஒரு சில எளியவழிகள் உள்ளன. தற்போது அதனை பார்ப்போம்.
- குளிர்ச்சியான பாலை பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், விரைவில் கரும்புள்ளிகள் மறையும்.
- 50 கிராம் மசூர் பருப்பை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதை அரைத்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
- நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
- மஞ்சள் தூளை ஒரு டீஸ்பூன் எடுத்து, அத்துடன் 1-2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.
- உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் எலுமிச்சை சாறு அல்லது தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள் தேனைப் பயன்படுத்த வேண்டும். பின் அதை முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
- கருமையான புள்ளிகளை நீக்க, வெங்காயத்தை வெட்டி, அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.