கண்களுக்கு கீழ் கருவளையத்தை போக்கும் உளுந்து பேக்! இப்படி பயன்படுத்தினாலே போதும் ?
பொதுவாக பெண்கள் அதிகமாக சந்திக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான் கருவளையம்.
இந்த பிரச்சனை பலவகையான காரணங்களினால் ஏற்படுகிறது.
குறிப்பாக அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன.
அதிலும் கருவளையம் வந்துவிட்டால் முக அழகே பொலிவிழந்து காணப்படும். வயதான தோற்றத்தை ஏற்படுத்தும்.
இதனை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவை என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையானவை
- புதிய தக்காளி - 1
- எலுமிச்சை சாறு- அரை டீஸ்பூன்
- உளுந்து மாவு- அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
செய்முறை
தக்காளியை மசித்து எடுக்கவும். அதில் எலுமிச்சை சாறு உடன் உளுந்து மாவை சேர்த்து நன்றாக மசிக்கவும். மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
இந்த பொருள்கள் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் ஆக்கி கண்களை சுற்றி மென்மையாக பயன்படுத்துங்கள். கண்களுக்குள் போகாமல் பார்த்துகொள்ளவும்.
இந்த பேஸ்ட்டை 10 அல்லது 20 நிமிடங்கள் வரை வைத்து உலர்வாக ஆன பிறகு ஈரத்துணியால் துடைக்கவும். பிறகு கண்களுக்கு பன்னீர் கொண்டு துடைத்து எடுக்கவும்.
ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வருவதன் மூலம் கண்களைச் சுற்றியுள்ள சருமத்தின் நிறத்தை இலகுவாக்கும் மற்றும் இறுதியில் உங்கள் கருவளையங்கள் முற்றிலும் மறைந்துவிடும்.