கருவளையங்களை நீக்க வீட்டில் உள்ள இந்த பொருட்கள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களை மிகவும் அழகாக காட்டுவது எப்போதுமே அவர்களது கண்கள் தான்.
ஆனால் சிலருக்கு கண்ணை சுற்றி சிலருக்கு கருவளையங்கள் தோன்றி சோர்வாக இருப்பதுபோல் தோன்றுகிறது.
அந்தவகையில், கருவளையங்களை நீக்க வீட்டில் உள்ள பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

எப்படி பயன்படுத்துவது?
ஐஸ் கட்டி- சில ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் சுற்றி, கண்களின் கீழே 10 நிமிடம் மெதுவாக வைத்தால் வீக்கம் குறைந்து கருவளையம் குறையும்.
வெள்ளரிக்காய்- குளிர்ந்த வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி, கண்களை மூடி 15 நிமிடம் வைத்தால் கருமை குறையும்.
தேநீர் பைகள்- தேநீர் டீ பைகளை சூடான நீரில் ஊறவைத்து குளிர வைத்து, 15 நிமிடம் கண்களின் மேல் வைத்தால் வீக்கம் மற்றும் கருவளையம் குறையும்.
பாதாம் எண்ணெய் + வைட்டமின் E- பாதாம் எண்ணெய் மற்றும் வைட்டமின் E கலந்து இரவில் கண்களின் கீழே மெதுவாக மசாஜ் செய்து காலையில் கழுவவும்.
தக்காளி + எலுமிச்சை சாறு- தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவவும்.
உருளைக்கிழங்கு சாறு- உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்து, பருத்தியில் நனைத்து 15 நிமிடம் கண்களின் கீழே வைத்தால் கருமை குறையும்.
கற்றாழை ஜெல்- கற்றாழை ஜெல்லை கண்களின் கீழே தடவி 15 நிமிடம் வைத்த பிறகு கழுவினால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |