வாழைப்பழம் இருந்தால் போதும்... வலியே இல்லாமல் முகத்தில் இருக்கும் முடியை நீக்கலாம்
பொதுவாகவே பருவம் எய்த பெண்களுக்கு முகத்தில் முடி வளருவது வழக்கம் தான்.
இதற்காக பலரும் பல விதமான முயற்சிகளை செய்வதுண்டு. ஆனால் அது நிரந்த தீர்வை தருவதில்லை.
வீட்டு வைத்தியங்கள் தொடங்கி செயற்கையான க்ரீம் என பல விடயங்களை செய்கிறார்கள்.
ஆண்களை போல் தாடை, மேல் உதடு போன்ற பகுதியில் வளரும் முடிகளை பெண்கள் விரும்புவதில்லை.
எனவே வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி முகத்தில் உள்ள முடியை வலியே இல்லாமல் நீக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பாட்டி வைத்தியமாக பார்க்கப்படும் கடலை மாவு வைத்தியம் முகத்தில் இருக்கும் முடியை நீக்க பெரிதும் உதவுகிறது என்பது தெரியுமா?
கடலை மாவை தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து குளிந்த நீரில் கழுவி எடுத்தால் தேவையற்ற முடிகள் நீங்கும்.
வாழைப்பழம் மற்றும் தேன்
வாழைப்பழத்தை மசித்து அதனுடன் தேன் சேர்த்து நன்றாக கலந்து, முகத்தில் தடவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் முடி வளருவது குறையும்.
எலுமிச்சை
சர்க்கரையுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் ஸ்க்ரப் போல் தடவவும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்து வருவதால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி குறையும்.
மேலும் தேவையற்ற சிகிச்சையை மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளவும். . இப்படி செய்வதால் முகத்தில் மற்ற விளைவுகளும் ஏற்பட வாய்புண்டு. கூடிய விரைவில் வயதான தோற்றமும் ஏற்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |