முகத்தில் உள்ள கருத்திட்டுகளை அகற்ற வேண்டுமா? இதை மட்டும் சாப்பிட்டால் போதும்
முகத்தில் இருக்கும் கருமையான திட்டுக்கள் மற்றும் முகப்பருக்கள் முகத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன.
மரபியல், சூரிய ஒளியின் வெளிப்பாடு, ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தோல் பிரச்சனைகள் போன்றவற்றால் முகத்தில் கருந்திட்டுகள் வருகின்றன.
இதை தவிர்க்க சில உணவு முறைகள் இருக்கின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
பழங்கள் மற்றும் காய்கறி
பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால் அதை சாப்பிட்டால் முகத்தில் கருந்திட்டுகள் வராமல் தடுக்க முடியும்.
வைட்டமின்கள், மினரல்ஸ் நிறைந்த காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்வதால் உடலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும்.
மீன்கள்
கொழுப்பு நிறைந்த மீன்கள் இயற்கையாகவே ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும்.
இது சரும அமைப்பை மேம்படுத்தவும், தோல் நெகிழ்ச்சி மற்றும் நீரேற்றத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
சால்மன், ட்ரவுட் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் சாப்பிடுவதால் தோலில் சுருக்கம், முகத்தில் கருந்திட்டுகள் ஏற்படாமலும் தப்பிக்கலாம்.
தக்காளி
தக்காளியில் லைகோபின் என்ற சத்து நிறைந்திருக்கிறது. இது, தோலை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும்.
தக்காளியில் உள்ள பல நற்பண்புகள் தோல் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கின்றன. தக்காளியின் பயன்பாடு கருந்திட்டுகளை நீக்கவும் சருமப் பொலிவை அதிகரிக்கவும் உதவும்.
shutterstock
கிரீன் டீ
கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள். குறிப்பாக கேட்டசின்கள், புற ஊதா கதிர்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும்.
இந்த தேநீரை பருகுவது வயதானவது போன்ற தோற்றத்தை தவிர்க்கவும், இளமையான தோற்றத்திற்கும் உதவுகிறது.
மேலும் இதன் பயன்பாட்டால் முகத்தில் ஏற்படும் கருமையான திட்டுக்கள் பரவாமல் தவிர்க்கலாம்.
நட்ஸ் மற்றும் விதைகள்
பாதாம், அக்ரூட் விதைகள், ஆளிவிதைகள் மற்றும் சியா விதைகள் ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா -3 கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.
இது ஆரோக்கியமான சருமத்தை பாதுகாக்க வழிவகுக்கும். பாதாம் மற்றும் சியா விதைகளின் பயன்பாடு தோல் பிரச்சினைகளை குறைக்கும் மற்றும் முக பொலிவையும் அதிகரிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |