முகத்தில் உள்ள பருக்கள் மாயமாய் மறைய இந்த ஒரு பொருள் போதும்! உடனே ட்ரை பண்ணி பாருங்க
சருமத்தை பாதுகாப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. சருமத்தின் ஆரோக்கியத்துக்கு முக்கியமான ஒன்று.
நமது முகத்தில் உள்ள அழுக்குகள், எண்ணெய், இறந்த சருமம் எல்லாவற்றையும் சேரவிடாமல் நீக்கினாலே போதும். பருக்கள் முகத்தில் மட்டும் வருவது கிடையாது.
அதை நாம் கவனிக்காமல் விடும்போது அது முதுகு, தோள்கள், கழுத்து, கைகள் போன்ற இடத்திலும் வரக்கூடும். இந்த பருக்களை எப்படி நீக்குவது குறித்து பார்க்கலாம்..
இளநீரின் நன்மைகள்:-
இளநீரில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டி மைக்ரோபியல் மற்றூம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளது. முகப்பருவை உண்டாக்கும் சரும எண்ணெயை கட்டுக்குள் வைக்க இவை உதவும்.
அதோடு இவை சருமத்தை சுத்தம் செய்வதோடு அதன் ஆழம் வரை சென்று சருமத்துளைகளின் உள்ளிருக்கும் கிருமிகளை வெளியேற்றுவதால் சருமத்தில் பாதிப்பு குறைகிறது.
பயன்படுத்தும் முறை:-
இளநீர் கால் கப் எடுத்து பஞ்சு உருண்டைகளை அதில் ஊறவைத்து, அதை எடுத்து முகத்தின் மீது தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தில் இளநீர் சருமத்தில் இறுக்கமாவதை உணர முடியும். பின்பு 20 நிமிடம் கழித்து முகத்தை அழுத்தி தேய்க்காமல் மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறு -1 ஸ்புன்
இளநீர் – 8 ஸ்பூன்,
இரண்டையும் நன்றாக கலந்து பஞ்சு உருண்டைகளை சேர்த்து முகத்தில் துடைத்து இலேசாக மசாஜ் செய்து ஊறவைக்கவும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுத்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.