சுட்டெரிக்கும் சூரியனால் களையிழக்கும் முகம்! இதிலிருந்து விடுபட இதோ சூப்பரான டிப்ஸ்
beauty tips
face
home remedies
sun tan
By Kishanthini
கோடைக்காலம் ஆரம்பத்து விட்டாலே போதும் பல சரும பிரச்சினைகளை நம்மை விரட்ட ஆரம்பிக்கும். அதில் முக்கியமானது சருமம் பொலிவு இல்லாமல் போவது. இதனை சன் டன் என்று கூறுவார்கள். சூரியனால் உருவாகும் சன் டான் ஆனது சருமத்தின் சீரற்ற நிறத்தை குறிக்கிறது.
உங்கள் சருமத்தில் நிறம் கொடுக்கும் மெலனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது.
கடுமையான சூரிய ஒளியில் வெளிப்படும் போது உடல் தோலின் மேற்பரப்பு கீழ் மெலனினை வெளியிடுகிறது.
இது புற ஊதா கதிர்வீச்சை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. எனினும் அதிகமான புற ஊதாக்கதிர்களின் வெளிப்பாட்டால் சன் டான் அதிகமாக இருக்கும். சன் டானை வெளியேற்றும் ஒரு சில வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
- தக்காளியை நன்றாக மசித்து பேஸ்ட் ஆக்கி அதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் நன்றாக தடவி விடவும். குறிப்பாக சரும நிறமாற்றம் அடைந்த பகுதிகளில் நன்றாக தடவி விடுங்கள். பிறகு 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி எடுங்கள். வாரத்தில் இரண்டு முறையாவது செய்திடுங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.
- எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து பிழிந்து பாதிக்கப்பட்ட இடத்தில் சருமம் முழுக்க தடவி விடவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை மந்தமான நீரில் கழுவி எடுக்கவும். வாரத்தில் இரண்டு நாட்கள் வரை இதை செய்துவிடவும்.
- வெள்ளரிக்காய் கற்றாழைஜெல் தேன் மூன்றையும் சேர்த்து நன்றாக மசித்து எடுக்கவும். இது தடிமனான பேஸ்ட் பதத்துக்கு வரும். இதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு உங்கள் முகத்தை நன்றாக கழுவி எடுக்கவும். இந்த பேஸ்ட்டை வாரத்தில் இரண்டு முறையாவது செய்துவிடவும்.
- பப்பாளி பழத்துண்டுகளை மிக்ஸியில் மசித்து எடுக்கவும். இந்த கூழ் உடன் எலுமிச்சை சாறு சேர்த்து இந்த பேஸ்ட்டை பதப்படுத்தி முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும். வாரத்தில் இரண்டு முறை இதை செய்து வரவும்.
- ப்ளாக் டீ ,மஞ்சள் தூள், கடலை மாவு இந்த மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்துக்கு குழைக்கவும். இதை சுமார் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவி விடவும். வாரத்தில் ஒருமுறையாவது இதை செய்யலாம்.
- குங்குமப்பூவின் 3 முதல் 4 இழைகள் ஒருகப் பாலில் கலந்து ஊறவிடவும். குங்குமப்பூ ஊறியதும் பால் நிறம் நன்றாக மாறிவிடும். இதை காட்டன் பஞ்சில் நனைத்து முகம் முழுக்க ஒற்றிவிடவும். பால் உலர உலர முகத்தில் ஒற்றி எடுக்கவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து முகத்தை கழுவி எடுக்கவும். இதை வாரத்தில் முன்று நாட்கள் வரை செய்யலாம்.
- ஆரஞ்சு பொடி ஒரு டீஸ்பூன் எடுத்து அதில் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் கலந்து நன்றாக பேஸ்ட் ஆக்கவும். இதை 10 நிமிடங்கள் வரை முகத்தில் வைத்திருந்து பிறகு மந்தமான நீரில் முகத்தை கழுவி எடுக்கவும். வாரத்தில் இரண்டு நாட்கள் வரை இதை செய்யலாம்.
- மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் எடுத்து அதை பாலில் குழைத்து நன்றாக தடிமனாக மாறும் பேஸ்ட் தயாரிக்கவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து முகத்தை நன்றாக கழுவி எடுக்கவும். வாரம் ஒருமுறை இதை செய்து வந்தால் போதும். பலன் கிடைக்கும்.
-
தேங்காயெண்ணெய் - 1 டீஸ்பூன் எடுத்து அதில் பாதாம் பொடி மற்றும் சர்க்கரை தேவையான அளவு சேர்க்கவும். இதை அடர்ந்த பேஸ்ட் பதத்துக்கு மாற்றி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி விடவும். பிறகு குளிர்ந்த நீரை கொண்டு முகத்தை கழுவி எடுக்கவும். இந்த பேக் சன் டான் வெளியேற்றுவதோடு முகத்துக்கு ஸ்கரப் செய்யவும் உதவும்.
- 2 டீஸ்பூன் தயிர் எடுத்து எலுமிச்சை சாறு அல்லது உருளைக்கிழங்கு சாறு எடுத்து நன்றாக கலக்க வேண்டும். இதை நன்றாக குழைத்து பேஸ்ட் பதத்துக்கு குழைத்து முகத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்து பிறகு தண்ணீரில் கழுவி எடுக்க வேண்டும். இதை வாரத்துக்கு மூன்று நாட்கள் வரை செய்து வரலாம்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US