கைகளில் அதிகமாக சுருக்கம் இருக்கா? அப்போ இந்த டிப்ஸ Follow பண்ணுங்க
பொதுவாகவே வயதாகிக்கொண்டு இருந்தாலே அதிகளவில் கைகள் மற்றும் முகங்களில் சுருக்கங்கள் வர ஆரம்பித்து விடும்.
ஒரு சிலருக்கும் வயதாகும் போது தான் சுருக்கங்கள் ஏற்படும். ஆனால் ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கியதைப் போன்று தோற்றமளிக்கும்.
இது பல காரணங்களால் ஏற்படும். நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவையாழும் ஏற்படும்.
சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது இல்லை. ஆகவே வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து எப்படி சருமத்தில் உள்ள சருக்கத்தை போக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
எலுமிச்சை ஸ்க்ரப்
ஒரு கப்பில் 3 - 4 ஸ்பூன் சர்க்கரையும், 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின் நன்றாக கழுவிவிட்டு இந்த கலவையை தடவி 5நிமிடம் மசாஜ் செய்யவும். இதை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர தோலில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
பால்
பாத்திரத்தில் 1 கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த கலவையில் 15 - 20 நிமிடங்களுக்கு கைகளில் தடவி, 15 - 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 4 - 5 முறை செய்துவர நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
அன்னாசி கூழ்
முதலில் அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்து எடுத்துக்கொள்ளவும். பின் கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இதை செய்து வர நல்ல மாற்றத்தை தோலில் பார்க்கலாம்.
ஆலிவ் ஆயில்
தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயை வைத்து கைகளில் மசாஜ் செய்யவும். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்ய நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்துக் கொள்ளவும். அதை கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர கைகளில் உள்ள சருக்கமானது குறைய ஆரம்பிக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |