உங்க வீட்டு பூ, காய் செடிகளில் இந்த பிரச்சனைகள் எல்லாம் இருக்கா? இதோ அதற்கு நிரந்தர தீர்வு
தற்போது இருக்கும் நவீன உலகில், விவசாயம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. கிராமத்தில் இருக்கும் பெரும்பாலனோர் நகரத்தை நோக்கி வருவதால், கிராமங்களில் விவசாயம் படி படியாக அழிந்து கொண்டு வருகிறது என்றே சொல்லலாம்.
அதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில், விவசாயத்தில் அதிகம் செயற்கை மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதை சாப்பிடும் மக்கள் நோய்களை இலவசமாக வாங்கிக் கொள்கின்றனர்.
இதில் தப்பித்து கொள்வதற்காக, நகரத்தில் இருக்கும் மக்கள் சிலர் தங்கள் வீடுகளிலே மூலிகை செடிகள், காய், பூ மற்றும் ஒன்றிரண்டு மரங்களை வளர்த்து, அதில் கிடைக்கும் காய்களை வைத்து சமைத்து கொள்கின்றனர்,
அதிகம் கடைகளில் வாங்காமல் அவ்வப்போது, வீட்டில் கிடைக்கும் காய்களை சமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இது இயற்கையாகவும், இருக்கும், உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். அப்படி அவர்கள் வீட்டு தோட்டமோ அல்லது மாடித் தோட்டமோ அப்படி செடிகள் அல்லது மரங்களை ஆரம்ப கட்டத்தில் வளர்க்கும் போது, இலைகளில் ஓட்டை விழுவது, பூச்சி பிரச்சனை, மஞ்சள் நிறத்தில் வாடிப் போய் கீழே விழுவது, பூக்கள் சரியாக பூக்காமல் இருப்பது, காய் காய்க்காமல் இருப்பது போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
இதற்கு வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே நாம் சரி செய்துவிடலாம்
தேவையான பொருட்கள்
- வேப்பை எண்ணெய்
- துவைக்கும் பவுடர்(தண்ணீரில் உற வைக்க வேண்டும்)
- மஞ்சள் தூள்
- பெருங்காய தூள்
- தண்ணீர்
செய்முறை
ஆரம்ப கட்டத்தில் இருக்கும் ஒரு 20 முதல் 25 செடிகளுக்கு அடிக்க வேண்டும் என்றால், 20 ML வேப்பை எண்ணையுடன், ஒரு லிட்டரில் உற வைத்த துவைக்கும் பவுடர் தண்ணீரை நன்றாக கலக்க வேண்டும்.
அதன் பின் அந்த தண்ணீரில் 1 டிஸ்பூன் மஞ்சள், 1/2 டிஸ்பூன் பெருங்காய தூளையும் நன்றாக சேர்த்து கலக்க வேண்டும். செடிகள் மேல் அப்படியே வேப்ப எண்ணெய் மட்டும் வைத்து அடித்தால், ஒரு பிசுபிசுப்பு தன்மை இருக்கும்,
இது செடிகளை பாதிக்க வாய்ப்புள்ளது. தண்ணீரில் சேராது. அதன் காரணமாகவே துவைக்கும் பவுடர் தண்ணீரை அதனுடன் சேர்த்துவிட்டால், வேப்ப எண்ணெய் நன்றாக சேர்ந்துவிடும்.
இப்படி அனைத்தையும் ஒன்றாக கலக்கி ஒரு லிட்டர் பாட்டிலில் வைத்து, அதை ஸ்பிரே போன்று, பாதிக்கப்பட்ட செடிகள் மீது ஒரு வார இடைவெளியில் அடித்து வந்தால், மேலே கூறிய இந்த பிரச்சனைகள் எல்லாம் வரவே வராது.