Money saving tips: பணத்தை சேமிப்பதற்கு இந்த முறையை பின்பற்றுங்கள்
பொதுவாகவே அனைவருக்கும் அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அன்றாட தேவைக்காக பயன்படுத்துவதன் மூலமான அனைத்து பணமும் செலவாகி விடும்.
வரும் பணம் இப்படியே சென்று விடுகிறதே என பலரும் கவலைப்படுவார்கள். இனி சரி பணத்தை சேமிக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள்.
ஆனால் அதற்கான முயற்சி யாரும் எடுப்பதில்லை. எனவே இப்பதிவில் எப்படி சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்கலாம் என தெரிந்துக்கொள்வோம்.
சேமிப்பு
சேமிப்பு என்பது ஒரே நாளில் உருவாகிவிடும் பழக்கம் அல்ல. சேமிப்பு இல்லாத குடும்பம் கூரையில்லாத வீடு என பொன்மொழி ஒன்றும் இருக்கிறது.
இதை சிறு வயதில் இருந்தே ஒருவர் பழகி இருக்க வேண்டும். சேமிப்பு இருந்தால் மட்டுமே எதிர்காலத்தில் சந்தோஷமான மற்றும் நிதி நிலைமையில் பிரச்சினை ஏற்படாமல் வாழ முடியும்.
'சிக்கனமும், சேமிப்பும் பொருளாதார சமநிலையைப் பேணுகின்றன' என்ற கருப்பொருளுக்கிணங்க ஒவ்வொரு ஆண்டும் ஆக்டோபர் மாதம் 31 ஆம் திகதியில் உலக சிக்கன தினம் கொண்டாடப்படுகிறது.
சிக்கனமாக இருப்பது என்பது, தேவையில்லாத செலவுகள் என நினைக்கும் செலவுகளை நீக்கி விட்டு நல்ல முறையில் செலவழிப்பதாகும்.
ஒருவர் சேமிப்பு பழக்கத்தை பழக்கிக் கொள்வது, அவருடைய வாழ்நாள் முழுவதும் பல விடயங்களுக்கு உதவும்.
பணத்தை சேமிக்கும் வழிகள் இதோ...!
01. பணத்தைச் சேமிப்பதற்கான முதல் படி, நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிப்பதாகும்.
02. ஒரு மாதத்தில் நீங்கள் என்ன செலவிடுகிறீர்கள் என்பது தெரிந்தவுடன், நீங்கள் பட்ஜெட்டை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
03. உங்கள் வரவு செலவுத் திட்டத்தை வருமானத்துடன் ஒப்பிடும்போது செலவுகள் என்ன என்பதை இலகுவாக தெரிந்துக்கொள்ள முடியும். இதன் மூலம் அதிக செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்.
04. உங்கள் வருமானத்தில் 15 முதல் 20 சதவீதம் வரை சேமிப்பதற்காக ஒதுக்கி வைப்பது நல்லது.
05. அன்றாட வீண் செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். அதாவது கடைகளில் சாப்பிடுவது, திரையரங்கு செல்வது மேலும் விதவிதமான ஆடைகள் வாங்குவதாகும்.
06. பணத்தை சேமிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று உங்களுக்கான இலக்காகும். எதற்காக பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என்பதை உறதி செய்துக்கொள்ளுங்கள்.
07. சம்பளம் வந்தவுடன் தேவைகளை முடித்து விட்டு மீதமுள்ள பணத்தை சேமிக்க நினைக்க வேண்டாம். முதலில் சேமிப்புக்கான பணத்தை தனியாக எடுத்து வைத்து விடுங்கள். பின்னர் தேவையை பூர்த்தி செய்துக்கொள்ளுங்கள்.
08. பணத்தை வீட்டிலோ வங்கியிலோ சேமித்து வைப்பதன் மூலம் பணவீக்கத்தால் அதன் பெறுமதி குறைந்து விடவும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். எனவே உங்களுடைய சேமிப்பை முதலீடு செய்து பணத்தை அதிகரிக்க முயற்சித்து பாருங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |