இறந்தவரின் பெயரில் இருக்கும் காரை எப்படி விற்பனை செய்வது? முழுவிவரம் உள்ளே
இறந்தவரின் பெயரில் இருக்கும் காரை விற்பனை செய்யும் போது வரும் சட்ட சிக்கல்களை எப்படி எளிதாக்குவது என்ற தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாரிசு சான்றிதழ் :
இறந்தவரின் பெயரில் கார் இருந்தால் முதலில் நாம் அவருக்கு இறப்பு சான்றிதழ் வாங்க வேண்டும். பின்னர், காருக்கு உரிமை கோரும் நபர், அவரது வாரிசு தான் என்பதற்காக வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டும்.
இதன்பின்னர், நேரடியாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு சென்று கார் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, உங்களது வாரிசு சான்றிதழ்கள், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இறந்தவரின் வாரிசு பெயரில் காரின் உரிமை மாற்றிக் கொடுக்கப்படும்.
கார் உரிமையாளர் பெயர் மாற்றப்பட்ட உடனே அந்த காரின் உரிமையாளராக வாரிசுதாரர்கள் மாறிவிடுவார்கள். இப்போது, காரை விற்பனை செய்வதற்கு எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாது.
கடன் இருந்தால்
இறந்த நபர் கார் மீது கடன் இருந்தால் காரை விற்க முடியாது. அதற்கு, சம்பந்தப்பட்ட வங்கி/நிதி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு நிலுவை தொகையை செலுத்த வேண்டும்.
இறந்தவரின் சார்பாக நீங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தப் போகிறீர்கள் என்றால், வாரிசு சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழின் நகலை நிதி நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும்.
நீங்கள் தொகையை செலுத்தாவிட்டால் தடையில்லா சான்றிதழை (NOC) பெறுவீர்கள். இதனை ட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) சமர்ப்பித்தால் எளிதாக காரை விற்க முடியும்.
இதனிடையே, இறந்த நபரின் காரை விற்றால் காப்பீட்டை ரத்து செய்ய வேண்டும். அதற்கு, இறப்புச் சான்றிதழின் நகலையும், சான்றளிக்கும் கடிதத்தையும் காப்பீட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |