Google மற்றும் Apple ஆப் ஸ்டோரில் போலியான App-ஐ கண்டுபிடிப்பது எப்படி?
உங்கள் Android அல்லது iOS ஸ்மார்ட்போனில் போலியான செயலிகளை (Fake Apps) எவ்வாறு கண்டறிவது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தற்போதைய ஸ்மார்ட்போன் உலகத்தில், காலை குட் மார்னிக் மெசேஜ் அனுப்புவதில் தொடங்கி, சமைப்பதற்கு, சாப்பிடுவதற்கு, விளையாடுவதற்கு, தூங்குவதற்கு, உடல் நலனை கண்காணிப்பதற்கு, ஷாப்பிங் செய்வதற்கு, ஒர்க்அவுட் செய்வதற்கு, பொருளை விற்பதற்கு, பணப்பரிவர்த்தனை செய்வதற்கு, பொழுதை போக்குவதற்கு என தொட்டதுக்கெல்லாம் ஏராளமான மொபைல் அப்பிளிக்கேஷன் (Apps) இருக்கின்றன.
Android போன்களை பயன்படுத்துபவர்களுக்கு Google Play Store-லும், Apple-ன் iOS போன்களை பயப்படுத்துபவர்களுக்கு App Store-லும் ஆயிரக்கணக்கான செயலிகள் உள்ளன.
அதில் பல செயலிகள், உங்கள் மொபைலில் இருந்து முக்கியமான தரவைத் திருடக்கூடிய போலி அல்லது தீங்கிழைக்கும் செயலிகளாக உள்ளன.
இந்த போலி செயலிகள் பிரச்சினைகளை உருவாக்குகின்றன, ஸ்மார்ட்போனின் செயல்திறனை மெதுவாக்குகின்றன, மேலும் உங்கள் மொபைலில் சேமிக்கப்பட்ட அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் திருட ஹேக்கர்களால் எளிதாக பயன்படுத்தப்படுகின்றன.
கடுமையான சரிபார்ப்பு செயல்முறை காரணமாக ஆப்பிளின் செயலி பாதுகாப்பானது என்று கருதப்பட்டாலும், App Store இன்னும் போலி ஆப்களை கொண்டுள்ளது.
போலியான செயலிகளை கண்டுபிடிப்பது எப்படி?
உங்கள் Android அல்லது iOS ஸ்மார்ட்போனில் போலியான செயலிகளை (Fake Apps) நீங்களே கண்டுபிடித்து அதனை தவிர்த்துவிட சில வழிகள் உள்ளன.
1, செயலியை இன்ஸ்டால் செய்வதற்கு முன், அதனை வெளியிட்டது யார் (Publisher) என்பதைப் பார்க்க வேண்டும். மோசடி செய்பவர்கள் இதே போன்ற பெயர்களைப் பயன்படுத்துவதால் கவனமாக இருங்கள்.
2, ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் கூகிளின் ப்ளே ஸ்டோரில் reviews-ஐ பாருங்கள். ஒரு உண்மையான செயலில் ஆயிரக்கணக்கான நேர்மறையான மதிப்புரைகள் (Positive Review) இருக்கும்.
3, வெளியீட்டு தேதியைப் பாருங்கள். ஒரு போலி செயலியில் சமீபத்திய வெளியீட்டு தேதி இருக்கும், உண்மையான செயலி "புதுப்பிக்கப்பட்ட" (updated) தேதியைக் கொண்டிருக்கும்.
4, தலைப்பு அல்லது விளக்கத்தில் எழுத்துப்பிழை தவறுகளை சரிபார்க்கவும். இந்த பயன்பாடுகள் பல சீனாவிலிருந்து வெளிவருகின்றன. டெவலப்பர்களின் முதல் மொழி ஆங்கிலம் அல்ல எனில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள்.
5, ஷாப்பிங் தள்ளுபடி கொடுப்பதாக உறுதியளிக்கும் செயலிகளை ஜாக்கிரதையாக அணுகவும்.
6, சந்தேகமாக இருந்தால், உங்கள் browser-ல் நீங்கள் வாங்க நினைக்கும் ஒரு கடையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு, அதில் "Get our app" என ஒரு ஐகான் அல்லது பொத்தானைத் தேடுங்கள். அதனை கிளிக் செய்வதன்முலம், சரியான செயலியை பதிவிறக்கக்கூடிய ஆப் ஸ்டோர் அல்லது கூகிள் பிளே ஸ்டோருக்கு அழைத்துச் செல்லும்.
கூகிள் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் இரண்டும் போலி செயலிகளை அடையாளம் காண தங்கள் பாதுகாப்புக் கொள்கைகளைத் திருத்திக்கொண்டே இருக்கின்றன, இருப்பினும் போலியான செயலிகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.