மாதம் ரூ.1.5 லட்சம் வருவாய்... ஜூஸ் கடை தொழிலில் உள்ள நுணுக்கம் என்ன தெரியுமா?
பொதுவாகவே பலரது அன்றாட வாழ்வில் ஜூஸ் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.
அதிலும் இந்த பழங்களை வைத்து செய்யக் கூடிய ஜூஸானது கொரோனா காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்து காணப்பட்டது.
ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு மக்களிடையே அதிக அளவில் வழங்கப்பட்டதால் பழத்திலான ஜூஸ் செய்து குடிப்பதற்கும் மற்றும் கடைகளில் வாங்கி குடிப்பதற்கும் முடிவு செய்தார்கள்.
அதன்போது பெயர் போனது தான் இந்த ஜூஸ் கடைகள். பழங்கள் மற்றும் காய்கறிச் சாறுகள் மட்டுமல்லாமல் புரோட்டீன் ஷேக் போன்ற ஆரோக்கியமான பானங்களும் பல கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
ஜூஸ் கடைகள் செய்து வரும் பலரும் இன்று நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்.
அந்தவகையில் மாதத்திற்கு ரூ. 1.5 லட்சம் வருவாய் எடுத்து தரும் ஜூஸ் கடையை செய்வதற்கு அத்தியாவசிய தேவைகள் என்னென்ன, இதற்கான ஆரம்ப முதலீடு எவ்வளவு, நமக்கு கிடைக்கப் போகும் லாபம் எவ்வளவு போன்ற ஒரு சில விடயங்களை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
அத்தியாவசிய தேவைகள்
கடை தொடங்குவதற்கு முன்பு நீங்கள் முதலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி போன்ற இடத்தில் அனுமதி பெற வேண்டும்.
அடுத்து ஜூஸ் கடைகள் செய்யவுள்ள இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
சொந்தமாக அல்லது வாடகைக்கு எடுப்பதாக இருந்தாலும் கட்டாயம் மக்கள் நடமாட்டம் இருக்கும் இடத்தில் திறப்பது நல்லது.
பின் ஃப்ரூட் மிக்ஸர்கள், கட்டிங் மெஷின் மற்றும் குளிர்சாதன பெட்டி போன்ற முக்கிய பொருட்களை வாங்கிக்கொள்ளவும்.
வாடிக்கையாளர்கள்
தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் போன்ற ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் நபர்களை ஈர்ப்பது சிறந்ததாக இருக்கும்.
சிறப்பு சலுகைகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களுக்கு முன் கடையை ஆரம்பிப்பது ஒரு சிறந்த நுணுக்கமான முறையாகும்.
முதலீட்டு விபரங்கள்
மாதத்திற்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய இந்த தொழிலுக்கு நீங்கள் முக்கியமான பொருட்களை வாங்குவதற்கு மட்டும் 5 முதல் 7 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டிய தேவை இருக்கும்.
ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப நீங்கள் ஜூஸ் வகைகளை மாற்றிக்கொள்ளலாம்.
லாபம்
ஜூஸ் தொழிலில் வரக்கூடிய லாபமானது ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்பது போன்று மாறும்.
நீங்கள் விற்கும் ஒவ்வொரு ஜூஸ் கப்பிற்கும் 50 முதல் 70 சதவீதம் லாபம் கிடைக்கும்.
உதாரணமாக கூற வேண்டுமென்றால், ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் விற்பனையானால் உங்களுக்கு இதில் 5000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |