இயற்கை முறையில் சுருண்ட முடியை நேராக மாற்ற இந்த இரண்டு பொருட்கள் போதும்
பலரும் சுருள் முடி பிடிக்காமல் அழகு நிலையங்களுக்கு சென்று செலவு செய்து முடியை நேராக மாற்றிக்கொள்கிறார்கள்.
தலைமுடியின் தோற்றத்தை மாற்றி அமைக்க ரசாயன கலவை கொண்ட பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நமது முடிக்கும் பலவிதமான பாதிப்புகள் உண்டாகின்றன.
அந்தவகையில், வீட்டிலேயே இயற்கையான முறையில் சுருண்ட முடியை நேராக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சாதம்- 1 கப்
- ஆலிவ் விதைகள் - 50g
பயன்படுத்தும் முறை
முதலில் மிக்சி ஜாரை எடுத்து அதில் சாதம் மற்றும் ஊறவைத்த ஆளி விதைகளை சேர்த்து கெட்டியான பேஸ்ட் செய்யவும்.
பின்னர் இதை தலைமுடியில் தடவி ஒரு துண்டை தலையில் கட்டி முடியை உலர வைக்கவும்.
இதை தடவி சுமார் 1 மணி நேரம் விட்டுவிட்டு பிறகு தலைமுடியை தண்ணீரில் சுத்தம் செய்யுங்கள்.
இந்த கலவையை உங்கள் வளைந்த முடியை நேராக மாற்ற உதவும்.
இதனை பயன்படுத்துவதற்கு முன் முடியை தண்ணீரில் சுத்தம் செய்த பிறகு பயன்படுத்துங்கள்.
தலை முடியில் வேர்க்குரு போன்ற புள்ளிகள் அல்லது பொடுகு பிரச்சனை இருந்தால் அதை தடவ வேண்டாம்.
நிபுணர் ஆலோசனையின்படி பொருட்களைப் பயன்படுத்துங்கள் இதனால் தலைமுடி நேராகவும் பட்டுப் போலவும் மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |