சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் செடி பற்றி தெரியுமா? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
வளர்ந்து வரும் நாட்களில் சர்க்கரை நோய் என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படுகின்றது.
அன்றாட வாழ்க்கை முறை, ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு முறைகளின் காரணமாக சர்க்கரை நோய் ஏற்படுகின்றது.
பொதுவாகவே மாவுச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் இந்திய மக்களுக்கு சர்க்கரை நோய்க்கான அபாயம் அதிகரிக்கிறது.
இந்நிலையில் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க காஸ்டஸ் இக்னஸ் (Costus Igneus) என்னும் இன்சுலின் செடியை குறிப்பிடுகின்றனர். இதை பற்றி விரிவாக காணலாம்.
Sanjiv Shukla/Getty Images
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இன்சுலின் செடி
இந்த செடி பொதுவாக தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டதாகும்.
வெப்ப மண்டல பகுதிகளில் இது வளரக் கூடியது. இந்தியாவில் தென்மாநில பகுதிகளில் இது வளருகின்றது. பெரும்பாலும் தோட்டங்களில் அழகுச் செடியாக வளர்க்கப்படுகின்றது.
இரத்த சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செடி மிகவும் பயனுள்ளது என ஆயுர்வேதம் கூறுகின்றது.
தினசரி ஒரு இலையை பறித்து, மென்று சாப்பிட்டு வந்தால் ரத்த சர்க்கரை பெருமளவில் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று தெரிவிக்கின்றனர்.
இதன் பெயர் தான் இன்சுலின் செடி என்றாலும் இதில் இன்சுலின் எதுவும் இருக்காது, இது உடலில் இன்சுலின் உற்பத்தியையும் தூண்டாது, மாறாக இது ரத்த சர்க்கரையை கிளைகோஜன் பொருளாக மாற்றம் செய்கிறது.
இதன் காரணமாக ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தவிர்க்கிறது. இந்த இலைகளில் புரதம், ஆல்ஃபா டோகோபெரால், பீடா கரோடீன் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன.
பூஞ்சைக்கு எதிரான தன்மை, பாக்டீரியாவுக்கு எதிரான தன்மை மற்றும் ஆண்டிஆக்ஸிடெண்ட் தன்மை போன்றவற்றை இன்சுலின் செடி கொண்டுள்ளது.
சளி, இருமல், நுரையீரல் தொற்று, சரும தொற்று, கண் தொற்று, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு, கர்ப்பப்பை பிடிப்பு, மலச்சிக்கல் போன்ற பல பிரச்னைகளுக்கு இது தீர்வு தரும்.
தினசரி இரண்டு இலைகளை சுத்தம் செய்து சாப்பிடலாம். இதை நசுக்கி, சாறு பிழிந்து தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் அருந்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |