Whatsapp chat-ஐ ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு எப்படி மாற்றுவது?
சமீபத்தில் Meta நிறுவனம் Whatsapp பயனர்களுக்கு ஒரு வசதியான புதிய அம்சத்தை வெளியிட்டது.
இது Backups அல்லது Cloud service-ன் தேவையில்லாமல் தங்கள் chat-ஐ ஒரு தொலைபேசியிலிருந்து மற்றொரு தொலைபேசிக்கு தடையின்றி மாற்ற அனுமதிக்கிறது.
முன்னதாக, Instant messaging service history சேமிப்பிற்கு Backups எடுக்க அல்லது cloud பதிவேற்றுவதற்கான விருப்பத்தை வழங்கியது.
ஆனால் இந்த புதிய முறை QR குறியீடுகளைப் பயன்படுத்தி செயல்முறையை எளிதாக்குகிறது.
இந்த அம்சத்தைப் பயன்படுத்தி Payment messages மற்றும் Call history மாற்ற முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Android சாதனங்களில் உங்கள் WhatsApp Chat History-ஐ எவ்வாறு மாற்றுவது என்பதை பற்றி பார்க்கலாம்.
எப்படி மாற்றுவது?
1. உங்கள் பழைய Phone-களில் Whatsapp-ஐ திறக்கவும்.
2. அடுத்து Options > Settings > Chats > Chat Transfer என்பதற்குச் சென்று "Start" என்பதைக் கிளிக் செய்யவும்.
3. புதிய போனில் அதே தொலைபேசி எண்ணெய் பயன்படுத்தி Register செய்துகொள்ள வேண்டும்.
4. பழைய போனிலிருந்து உங்கள் Chat History-ஐ மாற்ற "Start " என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5.உங்கள் சாதனத்துடன் QR குறியீட்டை Scan செய்ய தேவையான அனுமதிகளை வழங்கவும்.
6. இணைப்பு நிறுவப்பட்டவுடன்Transfer process தொடங்கும்.
7. Import chat செய்யப்பட்டதும், "Done" என்பதைத் தட்டவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |