கொரோனா அபாயம்! வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி மூலம் வைரஸ் பரவுமா?
கொரோனா உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. தற்போது கொரோனாவில் இருந்து புது வகை வைரஸ் உருமாறி கொடூரமாக தாக்கி வருகின்றது.
கொரோனா காலத்தில் வீட்டில் ஏசி பயன்படுத்துவதால் வைரஸ் பரவும் என்ற தகவல் பரவி வருகின்றது. ஆனால் இது குறித்து ஆதாரம் நிரூபிக்கபடவில்லை. இந்நிலையில் சீனா பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து பார்க்கலாம்..
சீனாவின் வூஹான் நகரில் உள்ள உணவகத்தில் ஏசி அருகில் அமர்ந்திருந்த 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ச்சியாளர் ஆய்வு செய்தபோது உணவகத்தில் இருந்த ஒருவருக்கு அறிகுறி அற்ற கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. அவர் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா பரவியது தெரியவந்ததது.
கொரோனா வைரசைக் கொண்ட காற்று ஏசி மூலம் பரவியது தெரியவந்ததது. இது போல பொது இடங்களில் ஏசி பயன்படுத்தினால் ஒருவருக்கு தொற்று இருந்தால் அது காற்று மூலம் அனைவருக்கும் பரவும் வாய்ப்புள்ளது.
எனவே பொது இடங்களில் ஏசி பயன்பாடு இல்லாமல் இருத்தல் நல்லது. பொதுவாகவே கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த காற்றோட்டம் உடைய அறைகள் முக்கியம். எனவே முடிந்தவரை ஜன்னல்களைத் திறந்து வைப்பதன் மூலம் அறைகளில் நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதேநேரம் வீடுகளில் இருப்பவர்கள் விண்டோ ஏசிக்களை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வீடுகளில் இருப்பதால் அவர்களின் சுவாசக் காற்றே ஏசிக்கள் மூலம் சுற்றி வரும்.
இதனால் வீடுகளில் கொரோனா நோயாளி மட்டும் இருந்தால், ஏசிக்களை பயன்படுத்துவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது.