முகம் பளபளக்க அஸ்வகந்தா ஒன்னு போதும்: இப்படி யூஸ் பண்ணி பாருங்க
சரும பராமரிப்பிற்கு ஆயுர்வேத மூலிகையான அஸ்வகந்தாவை பயன்படுத்தலாம். அஸ்வகந்தா பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளது.
இது சருமத்தில் இருக்கும் முகப்பரு, மந்தமான தன்மை மற்றும் இளவயதில் முதுமையான தோற்றம் போன்றவற்றை தடுக்கிறது.
இயற்கை முறையில் சரும பராமரிப்பிற்கு அஸ்வகந்தாவை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
1. முகப்பருக்கு அஸ்வகந்தா
தேவையான பொருட்கள்
- அஸ்வகந்தா பொடி- ½ ஸ்பூன்
- தேன்- 2 ஸ்பூன்
செய்முறை
அஸ்வகந்தா பொடியை தேனில் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து சுத்தம் செய்துகொள்ளலாம்.
இதனால் சருமத்தில் வீக்கத்தை குறைக்கும். முகப்பரு மற்றும் பருக்களின் தோற்றத்தை குறைக்கவும் உதவும்.
2. மென்மையான சருமத்திற்கு அஸ்வகந்தா
தேவையான பொருட்கள்
- அஸ்வகந்தா பொடி- 1 ஸ்பூன்
- பால்- 3 ஸ்பூன்
செய்முறை
அஸ்வகந்தா பொடி மற்றும் பாலை நன்கு கலந்து முகம், கழுத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி கொள்ளலாம்.
இது சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. சருமம் மென்மையாக இருக்க மிருதுவாக இருக்க இந்த பேக் போடலாம்.
3. சருமத்தில் பிஹெச் சமநிலைக்கு அஸ்வகந்தா
தேவையான பொருட்கள்
- அஸ்வகந்தா பொடி- ¼ ஸ்பூன்
- ரோஸ் வாட்டர்- 3 ஸ்பூன்
செய்முறை
அஸ்வகந்தா பொடி மற்றும் ரோஸ் வாட்டரை நன்கு கலந்து இதனை ஒரு பஞ்சில் தொட்டு முகத்தில் தடவி கொள்ளவும்.
சருமத்தின் பிஹெச் அளவை சமநிலைப்படுத்த இயற்கை டோனராக இவை உதவும்.
4. பொலிவான சருமத்திற்கு அஸ்வகந்தா
தேவையான பொருட்கள்
- அஸ்வகந்தா பொடி - 1 ஸ்பூன்
- சந்தன பொடி - 1 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - ½ ஸ்பூன்
- பால் - 2 டீஸ்பூன்
செய்முறை
சந்தனம் மற்றும் அஸ்வகந்தா இரண்டையும் நன்றாக கலந்து அதில் தேங்காய் எண்ணெய் கலந்து குழைத்து கொள்ளவும்.
இந்த பேஸ்ட் உடன் பால் சேர்த்து நன்றாக முகம் மற்றும் கழுத்து பகுதிகளையும் சேர்த்து தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யவும். முகம் இப்போது அழகாகவும் பொலிவாகவும் ஜொலிப்பதை பார்க்கலாம்.
5. முகப்பரு வடுக்கள் நீங்க அஸ்வகந்தா
தேவையான பொருட்கள்
- அஸ்வகந்தா பொடி- 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- பாதம் ஆயில்- 5 துளி
செய்முறை
எலுமிச்சை சாறு, தேன், அஸ்வகந்தா பொடி , பாதாம் எண்ணெய் அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்.
பேஸ்ட் போல் குழைத்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை சுத்தம் செய்யலாம். இந்த பேக் முகப்பரு வடுக்கள், பருக்கள் மற்றும் முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைய உதவுகிறது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |