கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு இந்த ஒரு எண்ணெய் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பெண்களுக்கு பொதுவாக முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
அந்தவகையில் அடர்த்தியாகவும், நீளமாகவும் முடி வளர விளக்கெண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- விளக்கெண்ணெய்- 3 ஸ்பூன்
- வெந்தய பொடி- 1 ஸ்பூன்
- பாதாம் எண்ணெய்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் வெந்தய பொடி, விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கவும்.
பின் அதை தலைமுடியின் வேர் முதல் நுனிப்பகுதி வரை நன்கு தடவ வேண்டும்.
அதன் பின் ஒரு துண்டை வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்து, அதை தலையில் சுற்றி, 15 நிமிடம் கட்ட வேண்டும்.
இதற்கடுத்து ஒரு 30 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இதனை, வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு அடர்த்தியாக வளர தொடங்கும்.
2. தேவையான பொருட்கள்
- விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்
- தேன் - 1 ஸ்பூன்
- முட்டை- 1
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் தேன் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின்பு அதை தலைமுடியின் வேர் முதல் நுனிப்பகுதி வரை தடவ வேண்டும்.
பின் ஒரு மணி நேரம் ஊற வைக்க வைத்து பிறகு மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |