ஒரு சொட்டு விளக்கெண்ணெய் இருந்தால் போதும்... சூப்பரா முகத்தை பளிச்சிட செய்திடலாம்
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆசை இருக்கும்.
அதற்காக பல முயற்சிகளையும் செய்து வருவார்கள். ஆனால் அவை அனைத்துமே நல்ல பலனை தருவதில்லை.
பாரம்பரியமாகவே கைவைத்தியம், சித்தவைத்தியம், ஆயுர்வேதம் போன்றவற்றில் விளக்கெண்ணெயும் பயன்படுத்தப்படுகிறது. இதை எகிப்து நாட்டவர்கள் கண் எரிச்சலுக்கு பயன்படுத்தினார்கள்.
ஆனால் இதை சருமத்திற்கும் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தினால் எவ்வாறான நன்மைகள் கிடைக்கும் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
எப்படி பயன்படுத்துவது?
விளக்கெண்ணெய் இரண்டு டீஸ்பூன் எடுத்து அதில் சுத்தமான பருத்தி உருண்டையை ஊறவைத்து சருமத்தில் முகம், கழுத்து பகுதியில் துடைக்க வேண்டும். பின் 3-5 நிமிடங்கள் எண்ணெயை மசாஜ் செய்யவும்.
பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகள்?
- வெயிலுடன் தொடர்பு கொண்டுள்ள சரும எரிச்சலை அகற்றும்
- சரும அழற்சியை போக்கும்
-
பூஞ்சை தொற்றுக்கு தீர்வு தரும்
- முகப்பருவை தடுக்கும்
- சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும்
- சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுக்கும்
- வீக்கத்தைக் குறைக்கும்
- உலர்ந்த உதடுகளை எதிர்த்துப் போராடும்
- ஒட்டுமொத்த தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |