முடி உதிர்வை குறைக்க உதவும் பாரம்பரிய எண்ணெய்: எப்படி பயன்படுத்தலாம்?
பெண்களுக்கு தலைமுடி என்பது ஒரு தனி அழகுதான்.
பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி மெலிதாகி விடுகின்றன.
அந்தவகையில், முடி உதிர்வை குறைக்க உதவும் பாரம்பரிய எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

பயன்படுத்தும் முறை
1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து உங்கள் உச்சந்தலையில் வாரம் இருமுறை மசாஜ் செய்யவும்.
1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய், 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 வைட்டமின் ஈ மாத்திரைகள் கலந்து தடவினால் முடி உதிர்வது தடுக்கப்படும்.

2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 8 ஸ்பூன் மிளகுக்கீரை எண்ணெய், 1 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து தோல் மற்றும் முடியில் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசவும்.
2 ஸ்பூன் வெங்காயச் சாறு, 2 ஸ்பூன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து 2 வைட்டமின் ஈ மாத்திரைகளை கலக்கவும். இதை பருத்தி துணியால் உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.
சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலந்து முடியில் தடவவும். இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        