உடல் எடையை குறைக்க உதவும் சியா விதைகள்: எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?
சியா விதைகளை உட்கொள்வதன் மூலம் நம் உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.
சியா விதைகளில் அதிகளவு நார்சத்து மற்றும் புரதம் உள்ளதால், இதனை உண்பதன் மூலம் நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் எடையை குறைக்க சியா விதைகளை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எப்படி பயன்படுத்துவது?
சியா விதைகளை காலை, மதியம், இரவு என எந்த நேரத்திலும் சியா விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.
உடல் எடையை குறைப்பதற்கு சியா விதைகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால் காலை உணவுக்கு முன் மற்றும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் சாப்பிடுவதற்கு பரிந்துரைக்கப் படுகிறது.
Adobe stock
இருப்பினும் ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டிக்கு மேல் உட்கொள்ள வேண்டாம் எனக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் சியா விதைகளை உட்கொண்டால், நிறைய தண்ணீர் குடிக்க பரிந்துரைக்க படுகிறது.
மேலும் சியா விதைகளை ஓட்ஸ், சாலட், தயிர், சூப், கிரேவி, ரொட்டி வகைகள், ஆம்லேட், சியா புட்டிங் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
சியா விதைகளின் பிற நன்மைகள்
சியா விதைகளில் புரதச்சத்து மிகுதியாக நிறைந்துள்ளதால் அவை தசைகளை உருவாக்கவும், எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.
m-chin/Getty image
சியா விதைகள் நார்ச்சத்து நிறைந்ததனால் அவை செரிமானத்திற்கு உதவுகிறது.
சியா விதைகளில் ஆல்பா-லினோலெனிக் அமிலம் அல்லது ALA ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது, இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |