சரும அழகை பராமரிக்கும் தேங்காய் பால்! இப்படி பயன்படுத்தி பாருங்க
தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இந்த தேங்காய் பாலில் நார்ச்சத்து , வைட்டமின் C, E, B1, B3, B5, மற்றும் B6, மினரல், இரும்புச் சத்து, செலினியம், சோடியம், கால்சியம் ,மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறந்துள்ளன.
இது ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிலும் பெரிதும் உதவி புரிகின்றது. தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் பால் - 1/2 கப்
- ரோஸ் நீர் - 1/2 கப்
- ரோஜா இதழ்கள் - சிறிதளவு
செய்முறை
முதலில் நீங்கள் குளிக்கும் நீரை சிறிது சூடுபடுத்தி கொள்ளவும். அடுத்து அந்த நீரில் தேங்காய் பால், ரேஸ் நீர், ரோஜா இதழ்கள் போன்றவற்றை சேர்த்து கொள்ள வேண்டும்.
இப்போது இந்த நீரை குளியலுக்கு பயன்படுத்தி வந்தால் சருமத்தின் சொரசொரப்புகள் நீங்கி விடும்.
அத்துடன் உங்களின் உடல் மிகவும் மென்மையாகவும் ஈர்ப்பத்ததுடனும் இருக்கும்.