கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெயுடன் இந்த பொருளை கலந்து தடவுங்கள்
ஆண், பெண் என அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
அந்தவகையில், கட்டுக்கடங்காத கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெயை வீட்டிலேயே எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்
- வெங்காயச்சாறு- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் வெங்காய சாற்றினை ஊற்றி, அத்துடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து கலக்கவும்.
பின் இதனை உச்சந்தலையில் படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.
அடுத்து குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்து, பின் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர முடி நன்கு வளரும்.
2. தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
- விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெய் எடுத்து அத்துடன் தேங்காய் எஎண்ணெய் சேர்த்து கலந்து, லேசாக சூடேற்றவும்.
பின் இதனை உச்சந்தவையில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்.
அடுத்து குறைந்தது 1 மணிநேரம் நினைக்க ஊறவைத்து பின் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இதனை வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |