தங்கம் போல் பளிக்கும் சருமத்திற்கு ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய்; எப்படி பயன்படுத்தலாம்?
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களது சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதில் அதிக ஆசை இருக்கும்.
ஆனால் காலநிலை மாற்றத்தினாலும் ஒரு சில தனிப்பட்டகாரணத்தினாலும் சருமத்தை சீரான முறையில் கவனிப்பதை தவிர்த்து விடுகிறார்கள்.
தற்போது கோடை காலம் நிலவி வருவதால் பலருடைய சருமம் பல பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கும். எனவே அடிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை எப்படி இலகுவான முறையில் பாதுகாக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
சருமத்தை பாதுகாக்கும் தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்திற்கு பல்வேறு வழிகளில் நன்மையை வழங்கும். இது உங்கள் சருமத்தை ஈரப்படுத்தவும், வீக்கத்தை போக்கவும், காயம் குணப்படுத்துவதை துரிதப்படுத்தவும், முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது எனலாம்.
தேங்காய் எண்ணெய் என்பது ஒரு வகை கொழுப்பு ஆகும். இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளுக்காக கூறப்படுகிறது.
எப்படி பயன்படுத்தலாம்?
தேங்காய் எண்ணெய் மசாஜ்
உள்ளங்கையில் தேங்காய் எண்ணெயின் துளியை எடுத்து தோலில் 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும்.
மசாஜ் செய்து 10 நிமிடத்திற்கு அப்படியே வைக்கவும்.
பின் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்து, ஒரு நாளைக்கு இரு முறை இப்படி செய்து வரலாம்.
தேங்காய் எண்ணெய் சர்க்கரை + ஸ்க்ரப்
இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இதை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் சருமத்தில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் சர்க்கரை + மஞ்சள்
ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும்.
இதை முகத்தில் தடவி, 20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
பின்னர் வெதுவெதுப்பான நீரில் அதை கழுவவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் நல்லது.
தேங்காய் எண்ணெய் + எலுமிச்சை
ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இதை சருமத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு அப்படயே விட்டு, பின்னர் கழுவவும்.
தேங்காய் எண்ணெய் + கற்றாழை
ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயில் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின் இதை முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
இறுதியாக முகத்தை கழுவினால் முகம் ஈரப்பதமாகி பளபளவென இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |