உடனடியாக முகப்பொலிவை அதிகரிக்க உதவும் அதிசய மாவு: எப்படி பயன்படுத்துவது?

Skin Care
By Yashini Sep 08, 2024 04:41 AM GMT
Report

சூரிய கதிர்கள், உணவு மாற்றம் போன்றவற்றால் முகம் மற்றும் உடம்பு பொலிவிழந்து நிறம் மங்குவதை ஏற்படுத்துகிறது.

பொதுவாக அனைவரும் தங்களின் முகத்தை வெள்ளையாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ளத்தான் விரும்புவார்கள்.

அந்தவகையில், வீட்டிலேயே இயற்கையாகவே முகப்பொலிவை அதிகரிக்க உதவும் சோள மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

உடனடியாக முகப்பொலிவை அதிகரிக்க உதவும் அதிசய மாவு: எப்படி பயன்படுத்துவது? | How To Use Corn Flour For Skincare Facepack

1. தேவையான பொருட்கள்

  • சோள மாவு - 1 ஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
  • தேன் - 1 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஒரு பவுலில் சோள மா, தண்ணீர் சேர்த்து கலந்து பின் எலுமிச்சை சாறு , தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.

இந்த பேஸ்டை கண்களைச் சுற்றியுள்ள பகுதியைத் தவிர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின்னர் கழுவவும்.

இந்த பேஸ் பேக்கை வாரம் ஒருமுறை போட்டு வந்தால் சருமம் பொலிவாக மாறும்.

சரும பொலிவை வேகமாக அதிகரிக்க இந்த ஒரு மா போதும்: வீட்டிலேயே தயாரிக்கலாம்

சரும பொலிவை வேகமாக அதிகரிக்க இந்த ஒரு மா போதும்: வீட்டிலேயே தயாரிக்கலாம்

2. தேவையான பொருட்கள்

  • சோள மாவு - 1 ஸ்பூன்
  • தயிர் - 1 ஸ்பூன்
  • சர்க்கரை - 1/2 ஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு

பயன்படுத்தும் முறை

முதலில் சோள மாவை தயிருடன் கலந்து பின் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

உடனடியாக முகப்பொலிவை அதிகரிக்க உதவும் அதிசய மாவு: எப்படி பயன்படுத்துவது? | How To Use Corn Flour For Skincare Facepack

இந்த கலவையை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை நீரில் கழுவவும்.

வாரம் ஒரு முறை இந்த ஸ்கரப் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் புது பொலிவை பெறும்.

3. தேவையான பொருட்கள்

  • சோள மாவு - 1ஸ்பூன்
  • கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு

பயன்படுத்தும் முறை

ஒரு பவுலில் சோளமா மற்றும் கற்றாழை ஜெல்லை எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.

கற்றாழை சருமத்திற்கு ஈரப்பதமாக்கி இளமையாக வைத்து கொள்ள உதவுகிறது.

வேகமான முடி வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்: ஒரு பொருள் போதும் வீட்டிலேயே தயாரிக்கலாம்

வேகமான முடி வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்: ஒரு பொருள் போதும் வீட்டிலேயே தயாரிக்கலாம்

4. தேவையான பொருட்கள்

  • சோள மாவு - 1 ஸ்பூன்
  • வெள்ளரி சாறு - 2 ஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு

பயன்படுத்தும் முறை

சோள மாவை வெள்ளரி சாறுடன் கலந்து பேஸ்ட் செய்யவும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

உடனடியாக முகப்பொலிவை அதிகரிக்க உதவும் அதிசய மாவு: எப்படி பயன்படுத்துவது? | How To Use Corn Flour For Skincare Facepack

வறண்ட சருமம் இருப்பவர்கள் இதனை வாரம் ஒரு முறை அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

5. தேவையான பொருட்கள்

  • சோள மாவு -1 ஸ்பூன்
  • முட்டை வெள்ளை கரு - 1
  • தேன்- 2 ஸ்பூன்
  • தண்ணீர் - தேவையான அளவு

பயன்படுத்தும் முறை

ஒரு பவுலில் சோள மாவு, தேன் சேர்த்து கலந்து ஒரு முட்டையின் வெள்ளை கரு சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்யவும்.

அதிவேகமாக முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எண்ணெய்: வீட்டிலேயே தயாரிக்கலாம்

அதிவேகமாக முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எண்ணெய்: வீட்டிலேயே தயாரிக்கலாம்

இந்த பேஸ்டை முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு முகத்தை கழுவவும்.

தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கு இயற்கையாக பிரகாசத்தை அளிக்க உதவுகிறது.           

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US