ஒரு கப் தயிர் போதும்...! வெயிலில் கருப்பான முகம் சிவப்பாக மாறிவிடும்
பொதுவாகவே அனைத்து பெண்களுக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆசை இருக்கும்.
ஆனால் குறிப்பிட்ட ஒரு சில காரணத்தின் விளைவாக ஒரு சில பெண்களின் சருமம் சீராக இருப்பது இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக கூற வேண்டுமென்றால், காலநிலை மாற்றம், ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கலாகும்.
அந்தவகையில் தற்போது கோடை காலம் நிலவி வருகிறது. இந்த வெயிற் காலத்தில் பொதுவாகவே அனைவரது சருமம் வெயிலில் சுட்டு கருப்பாக இருக்கும்.
இதற்கான தீர்வை தான் இந்த பதிவில் விரிவாக பார்க்க போகின்றோம்.
அவகேடோ மற்றும் தயிர்
தேவையான பொருட்கள்
½ கப் தயிர்
½ அவகேடோ
கற்றாழை ஜெல் 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின் இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து வைக்கவும்.
20 முதல் 25 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
ஓட்ஸ் மற்றும் தயிர்
தேவையான பொருட்கள்
தயிர் 1 தேக்கரண்டி
1 டீஸ்பூன் ஓட்மீல்
½ டீஸ்பூன் தேன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின் இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து வைக்கவும்.
10 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்லது.
தேன் மற்றும் தயிர்
தேவையான பொருட்கள்
½ கப் தயிர்
தேன் 2 டீஸ்பூன்
செய்முறை
ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின் இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து வைக்கவும்.
20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவி அகற்றவும்.
மஞ்சள் மற்றும் தயிர்
தேவையான பொருட்கள்
½ கப் தயிர்
மஞ்சள் 1 டீஸ்பூன்
செய்முறை
மஞ்சள் தூளுடன் தயிர் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின் இதை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தேய்த்து வைக்கவும்.
20 முதல் 30 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |