இனி முட்டை ஓட்டை தூக்கி வீசாதீங்க.. முகத்திற்கு இப்படி கூட பயன்படுத்தலாமாம்!
Skin Care
By Kishanthini
பொதுவாக நம்மில் பலருக்கும் முட்டை மிகவும் பிடித்த அசைவ உணவு.
விருப்பமான உணவு மட்டுமல்லாது ஊட்டச்சத்து நிறைந்த உணவு என்பதும் கூடுதல் ஆரோக்கியம்.
முட்டை சாப்பிடுவோர் பலரும் முட்டை ஓடை தேவையற்றது என தூக்கி எரிந்துவிடுவார்கள். உண்மையில் முட்டையைக் காட்டிலும் முட்டை ஓட்டில் தான் ஊட்டச்சத்துகள் அதிகமாக உள்ளன.
குறிப்பாக இது சரும அழகில் பெரிதும் பங்கு வகிக்கின்றது. அந்தவகையில் முட்டை ஓட்டை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
- முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து கலந்து பிரஷ் கொண்டு சருமத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.வாரத்திற்கு மூன்று நாட்கள் இதை செய்து வரலாம். இப்படி செய்து வருவதன் மூலம் சருமம் நீர்ச்சத்துடன் இருப்பதோடு முட்டை சருமத்துக்கு சிறந்த எக்ஸ்ஃபோலியேட்டராகவும் செயல்படும்.
- முட்டையின் ஓட்டை சுத்தம் செய்து அதை பொடி செய்து கொள்ள வேண்டும். காலையில் வழக்கம் போல பல் துலக்கியதும் இந்த பொடியைக் கொண்டு கைகளால் பற்களை நன்கு தேய்த்துக் கொடுக்க வேண்டும்.
இப்படி தினமும் தொடர்ந்து செய்து வருவதால், பற்கள் முத்து போல வெண்மையாக இருக்கும்.
- சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு அடிக்கடி சரும வீக்கம், தடிப்புகள், சரும எரிச்சல் பிரச்சினை உள்ளவர்களுக்கு முட்டை ஓட்டின் பொடி நல்ல பலனைத் தரும். சருமத்தை ஸ்மூத்தாக்கி மென்மையாக வைத்துக் கொள்ள உதவும்.
ஒரு பௌலில் சிறிதளவு முட்டை ஓட்டின் பொடியைச் சேர்த்து அதனுடன் சிறிதளவு ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து நன்கு கலந்து 4-5 நாட்கள் வரை மூடி வைத்து ஊற வைத்துவிட வேண்டும்.
நன்கு ஊறியதும் இந்த கலவையை ஒரு காட்டன் பாலில் தொட்டு சரும எரிச்சல், அரிப்பு மற்றும் தடிப்புகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள். நன்கு உலர விட்டு பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை கூட பயன்படுத்தலாம்.
- 1 முட்டை ஓடு பொடி
2 டீஸ்பூன் தேன்
பயன்படுத்தும் முறை
ஒரு பௌலில் ஒரு ஸ்பூன் அளவுக்கு முட்டை ஓட்டின் பொடியைச் சேர்த்து அதனுடன் சிறிது தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே உலர விட்டு பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.
வாரத்திற்கு ஒரு முறை இதை செய்தால் போதும். மூன்று அல்லது நான்கு வாரங்களுக்குள் நல்ல பலன் கிடைக்கும். கரும்புளளிகள், தழும்புகள் மறைய ஆரம்பிக்கும்.
- 1 முட்டை ஓடு பொடி - 1 ஸ்பூன்
1 முட்டையின் வெள்ளைக்கரு
பயன்படுத்தும் முறை
முட்டை ஓட்டின் பொடியுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு மை போல பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். ஸ்பூனால் கலக்கும்போது நன்கு பேஸ்ட் ஆகாது. அதனால் பிளண்டரில் போட்டு ஒரு அடி அடித்துவிட்டு பயன்படுத்துங்கள்.
முகத்தைக் கழுவிவிட்டு, இந்த பேஸ்ட்டை சருமத் துளைகள் உள்ள இடம் முழுக்க, குறிப்பாக கன்னப் பகுதிகளில் திக்கான மாஸ்க்காக அப்ளை செய்து கொள்ளுங்கள்.
20-30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிவிட்டு பாருங்கள். முதல் முறை அப்ளை செய்யும்போதே உங்களுக்கு நல்ல மாற்றம் தெரியும்.
வாரம் ஒரு முறை இதை தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வந்தால் பலன் கிடைக்கும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US