பலூன் போல இருக்கும் தொப்பையை குறைக்கணுமா? பூண்டை இப்படி சாப்பிட்டு பாருங்க
பொதுவாகவே அனைவரும் உடற் பருமனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்காக பல விதமான முயற்சியில் ஈடுப்பட்டு வருவதும் வழக்கம்.
அதாவது உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு அனைத்திலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வார்கள். அவை அனைத்தும் செய்யாமல் எப்படி இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்கலாம் என யோசித்துக் கொண்டு இருப்பீர்கள்.
அதுக்காகவே, உறுதுணையாக பூண்டு இருகிறது. ஆம். பூண்டு உடல் எடையை குறைக்க உதவும் என்பது பற்றி தெரியுமா? இது உடலில் உள்ள நச்சு தன்மையை வெளியேற்றி, எடையை குறைத்து விடும்.
அந்தவகையில் பூண்டை வைத்து எப்படி எடையை குறைக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
காலையில் வெறும் வயிற்றில் ஒரு சில பூண்டு பற்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுவதாக தெரியவந்துள்ளது.
உடல் எடையை குறைக்க உதவும் பூண்டில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது, இது எடை இழப்புக்கு மேலும் உதவுகிறது.
உடல் எடையை குறைக்க பூண்டு எப்படி உதவுகிறது?
காலையில் வெறும் வயிற்றில் ஒரு சில பூண்டு பற்களை சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது, ஏனெனில் இது உடலில் சேரும் கொழுப்பை கரைக்கிறது. பூண்டை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும்.
Image Source : FREEPIK
உடல் எடையை குறைக்க பூண்டு சாப்பிடுவது எப்படி?
உடல் எடையை குறைக்க தினமும் 2 பூண்டு பற்களை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், பூண்டு சாப்பிட வேண்டாம்.
கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம், இரத்தப்போக்கு கோளாறுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் இதை முயற்சிக்கக் கூடாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |