2 கரண்டி நெய் இருந்தால் போதும்... உடனே காய்ச்சலை விரட்டியடிக்கலாம்
பொதுவாகவே தென் இந்தியர்களின் உணவில் நெய் என்பது அத்தியாவசிய பொருளாகும். நெய் ஆனது அதன் செயல்திறனை அதிகரிக்க சில பொருட்களுடன் சேர்த்து பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
பருவகால நோய்கள் மற்றும் வானிலை ஈரப்பதத்தால் ஏற்படும் ஒவ்வாமைகளின் அதிகரிப்பு இந்நேரத்தில் அதிகமாக ஏற்பட்டு வருகிறது.
இந்த நேரத்தில்தான் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும்.
எனவே சளி, இருமல் மற்றும் காய்ச்சலை சரிசெய்ய நெய்யை எப்படி பயன்படுத்தலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
நெய்யில் உள்ள சத்துக்கள்
புரதம், பால் கொழுப்புகள், கொழுப்பில் கரையக் கூடிய விட்டமின்களான விட்டமின் ஏ, விட்டமின் இ, விட்டமின் டி உள்ளன.
எப்படி உடலிற்கு எடுத்துக்கொள்ளலாம்?
நெய் மற்றும் மிளகு டீ
ஒரு கரண்டி நெய் மற்றும் ஒரு சிட்டிகை மிளகு தூள் சேர்த்து சூடான நீரில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு செய்தால் கரகரப்பான தொண்டை பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
மஞ்சள் - நெய் பால்
ஒரு கப் சூடான பாலில் நெய் மற்றும் மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்தால் பால் தயார். இது குடிப்பதன் மூலம் உடலில் தேவையற்று தேங்கியுள்ள நீர் வெளியேறும்.
நெய் மற்றும் இஞ்சி
ஒரு கரண்டி நெய் உருக்கி அதில் நறுக்கப்பட்ட இஞ்சியை சேர்த்து வதக்கவும். அதை தினமும் சாப்பிட்டு வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆவி பிடித்தல்
ஒரு பாத்திரத்தில் சூடான நீர் சேர்த்து அதில் நெய் விட்டு ஆவிப்பிடிக்க வேண்டும். இது சுவாசப் பாதையில் உள்ள நீர்த்துளிகளை வெளியேற்றி, சளி மற்றும் இருமலையும் விரட்டியடிக்கும்.
தேன் மற்றும் நெய்
ஒரு கரண்டி நெய்யில் தேன் கலந்து குடித்தால் இருமல் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். மேலும் கரகரப்பான தொண்டை இயல்பானதாக மாறும்.
நெய் மசாஜ்
இரவில் தூங்க செல்வதற்கு முன்பு நெய்யில் பூண்டு சேர்த்து சூடாக்கி, காலில் தடவினால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.
நெய், கிராம்பு
உருக்கிய நெய்யில் கிராம்பு சேர்த்து வதக்கி சாப்பிட்டால் காய்ச்சல், சளி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |