என்றும் இளமையுடன் இருக்க ஆசையா? அப்போ வெண்டைக்காயை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
இன்றைய காலத்தில் பலருக்கு இளமையிலே வயதான தோற்றம் வந்துவிடுகின்றது.
இளமையிலேயே வயதான தோற்றத்தைத் தருவது போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.
ரசாயனங்கள் நிறைந்த சரும பராமரிப்பு பொருள்கள் பயன்படுத்துவதும், சூரியக் கதிர்களின் தாக்கமும் முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றது.
இவற்றை போக்க அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. இயற்கை பொருட்களை வைத்து கூட சரி செய்ய முடியும்.
அதில் வெண்டைக்காய் பெரிதும் துணை புரிகின்றது. தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
image - dailyhunt
தேவையான பொருள்கள்
- வெண்டைக்காய் - 5
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- தண்ணீர் - ஒரு கப்
பயன்படுத்தும் முறை
வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதில் வெண்டைக்காயை சேர்த்து நன்கு 10 நிமிடங்கள் வரை கொதிக்க வேண்டும்.
பின் அடுப்பை அணைத்து விட்டு வெண்டைக்காயை ஆறவிட்டு மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்து இந்த கலவையுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து பேஸ்பேக்காக அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
பயன்கள்
- சருமம் வறட்சியாக இருப்பவர்கள் இந்த பேஸ்பேக்கை பயன்படுத்தலாம்.
- இது சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கி நல்ல பொலிவையும் அழகையும் கொடுத்து இளமையாக வைத்திருக்கும்.