எலுமிச்சை தோலை இப்படியும் பயன்படுத்தலாம் தெரியுமா?
பொதுவாகவே எலுமிச்சையில் பல நன்மைகள் காணப்படுகிறது. அதனை ஜூஸ், டீ, ரசம் என வெவ்வேறு வகையில் சமைத்து சாப்பிடுவது வழக்கம்.
எலுமிச்சையில் இயற்கையாகவே அமிலச்சத்து காணப்படுகிறது. பலரது வீடுகளில் பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கும் இதை பயன்படுத்துவார்கள்.
பெரும்பாலனவர்கள் எலுமிச்சையில் இருந்து சாற்றை எடுத்து விட்டு தோலை தூக்கி எறிந்து விடுவது தான் வழக்கம்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் எப்படி எலுமிச்சை தோலை பயன்படுத்தலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
எலுமிச்சை தோலை எப்படி பயன்படுத்தலாம்?
காய்கறிகளை வெட்டும் பலகையை எலுமிச்சை தோல் வைத்து சுத்தம் செய்யலாம். இது இயற்கையான கிருமி நாசினியாக செயல்படும்.
பாத்திரங்களை கழுவும் தொட்டி மற்றும் முகம் கழுவும் தொட்டியில் எலுமிச்சை தோல் தேய்த்து சுத்தம் செய்யதால் அது பளபளப்பாக இருக்கும்.
மைக்ரோவேவ் ஓவனில் இருந்து வரும் நாற்றத்தை துரத்துவதற்கு, ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் எலுமிச்சை தோல்களை ரே்த்து சூடாக்கவும். பின் அதை ஆவியாகி ஓவன் முழுவதும் பரவ செய்யவும். அடுத்து அதை துடைத்து எடுத்தால் நல்லது.
காப்பர் பாத்திரங்களில் தண்ணீர் அருந்து பழக்கத்தை பலரும் வைத்திருக்கிறார்கள். அந்த பாத்திரங்களை எலுமிச்சை தோல் வைத்து சுத்தம் செய்யலாம்.
டீ, காஃபி தயார் செய்யும் பாத்திரங்களில் கறை படிந்து அசுத்தமாக இருக்கும். இதற்கு அந்த பாத்திரத்தில் மீது எலுமிச்சை தோல் வைத்து சுத்தம் செய்தால் பளபளப்பாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |