சரும அழகை மெருகூட்ட முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்தலாம்?
beauty tips
multani mitti
By Kishanthini
முல்தானி மெட்டி என்பது சருமத்திற்கு அழகை உண்டாகும் ஒரு ஒப்பனை பொருளாகும்.
முல்தானி மெட்டியில் மக்னீசியம், குவார்ட்ஸ், சிலிகா, இரும்பு, கால்சியம், கால்சைட் மற்றும் டாலமைட் உட்பட பல்வேறு கனிமங்கள் அடங்கி உள்ளது. இது சருமத்தில் உள்ள பருக்களையும், கசடுகளையும் நீக்கும்.
அதுமட்டுமின்றி சருமத்தை சுத்தப்படுத்தி, தெளிவடையச் செய்யும். அந்தவகையில் இதனை எப்படி முகத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
- முல்தானி மெட்டியை சுத்தமான பன்னீரில் குழைத்து, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் கழித்து, தண்ணீரால் கழுவவேண்டும். பரு பிரச்சனை உள்ளவர்கள், அதிகமான எண்ணெய் சுரப்பு உள்ளவர்களுக்கு மிக நல்லது.
-
முகப்பரு உள்ளவர்கள், அதிக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், முல்தானி மெட்டியுடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்பேக் போடலாம். மிகச் சிறந்த பலன் கிடைக்கும். 15 நிமிடங்களுக்கு மேல் அந்த பேக்கை வைத்திருக்கக் கூடாது. வெளியே செல்லும் முன், முல்தானி மெட்டி போட்டு முகத்தைச் சுத்தப்படுத்தினால், முகம் பளீரென இருக்கும்.
-
வெயில்காலத்தில் முல்தானி மெட்டி பயன்படுத்தும்போது, சிலருக்கு முகத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவர்கள் முல்தானி மட்டியுடன் தூய்மையான சந்தனத்தூளைக் கலந்து பூசலாம். எரிச்சல் குறைந்து, குளுமையாக இருக்கும்.
-
புதினா, வேப்ப இலைகளின் விழுது இவற்றுடன் 2 டீஸ்பூன் முல்தானி மெட்டியைக் கலந்து, முகப் பருவின் மீது போட்டு வந்தால், பருக்கள் விரைவில் மறையும். வேம்பு, மிகச் சிறந்த கிருமிநாசினி. புதினா, பருவைக் காயச் செய்கிறது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US