அடர்ந்த நீளமான கூந்தலுக்கு இந்த ஒரு சாறு போதும்: எப்படி பயன்படுத்துவது?
அடர்ந்த நீளமான கூந்தலை விரும்பாத பெண்கள் இங்கு யாரும் இருக்க முடியாது.
இருப்பினும் வாழ்க்கை முறை, உணவு முறை போன்ற பல காரணங்களால் முடி உதிர்தல், வறண்ட முடி பிரச்சனை உண்டாகும்.
அந்தவகையில், அடர்த்தியான நீளமான கூந்தலுக்கு வெங்காயச்சாறு ஒன்று போதும். இதை பயன்படுத்துவதால் பல நன்மைகள் கிடைக்கும்.
கூந்தலுக்கு வெங்காயச்சாறு
வெங்காய சாற்றில் உள்ள கந்தகம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது.
இது மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து வேர்களை வலுப்படுத்த உதவுகிறது, மேலும் இது நீண்ட மற்றும் அடர்த்தியான முடிக்கு வழிவகுக்கிறது.
இதில் உள்ள கந்தகம் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து முடி உடைவதை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.
மேலும் இவை பொடுகு மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பை குறைக்க உதவுகிறது.
தலைமுடியில் வெங்காயச்சாறை பயன்படுவதன் மூலம் கூந்தலுக்கு பிரகாசத்தையும் பளபளப்பையும் சேர்க்க உதவும்.
வெங்காயச்சாறு தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு தலைமுடியை மென்மையாக மாற்றும்.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் வெங்காயத்தை நன்கு அரைத்து அதன் சாற்றை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின் இதனை நன்கு தலைமுடியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யவும்.
அடுத்து இதனை 30 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பின் மென்மையான ஷாம்பு கொண்டு அலசிக்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து வாரத்திற்கு 1 அல்லது 2 முறை பயன்படுத்தவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |